உடல் மற்றும் மனவலிமைக்கு எண்ணெய் (ஆயில்) மசாஜ்..!

  • by
எண்ணெய்

நாம் சோர்வடையும் போதெல்லாம் நம் நினைவுக்கு வருவது நீண்ட நேர உடல் மற்றும் தலை மசாஜ். இதை செய்வதன் மூலமாக நமது தசைகள் அனைத்தும் தளர்ந்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் நம்முடைய உடல் வலி  தலை பாரம், தலைவலி, மன பதட்டம், மற்றும் மன அழுத்தம் போன்ற அனைத்தும் தீரும்.

ஆலிவ் ஆயில்

உங்கள் சருமம் மென்மையாகவும், வரட்சிகள் அனைத்தும்  அகன்று பொலிவாக இருப்பதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இது எந்த அளவிற்கு உங்கள் சருமத்தை பாதுகாக்கிறதே அதே அளவிற்கு உங்கள் உடல் வலிகளையும் போக்கிறது.

பாதாம் எண்ணெய் மசாஜ்

உங்கள் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது பாதாம் எண்ணெய். இதை அதிக அளவில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்கள் பயன்படுத்துவார்கள். எனவே இதை உங்கள் உடலில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் சருமம் பொலிவடையும்.

மேலும் படிக்க – நச்சுகளில் இருந்து உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..!

கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெயில் மசாஜ் செய்வதன் மூலமாக உங்கள் தசைகளின் ஏற்பட்ட அனைத்து கலைப்புகளையும் அகற்றுவதை தவிர்த்து உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் நரம்பு மற்றும் உடல் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

நாம் தினமும் பயன் படுத்தக் கூடிய தேங்காய் எண்ணெயினால் செய்யப்படும் மசாஜ் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. இது நம்முடைய சருமத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதை தினமும் தேய்த்து மசாஜ் செய்தால் உங்கள் சருமம் மென்மையாகும்.

விளக்கெண்ணை மசாஜ்

உங்கள் சருமம் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் விளக்கெண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது கெட்டியாக இருப்பதினால் இதை உங்கள் தலையில் தேய்ப்பதன் மூலமாக உங்கள் கூந்தல் ஆரோக்கியம் அதிகரித்து உங்கள் உடல் முழுக்க இருக்கும் சூட்டைத் தணிக்கும்.

மேலும் படிக்க – அரளிப் பூக்களில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

நல்லெண்ணெய் மசாஜ்

மசாஜ் என்றாலே நாம் முதலில் தேர்ந்தெடுப்பது நல்லெண்ணெய்தான். இதைக் கொண்டு மசாஜ் செய்வதுதான் எல்லோரின் பாரம்பரியமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது. தீபாவளி மற்றும் இதர பண்டிகைகளுக்கு நாம் தலையில் முதலில் பயன்படுத்தும் இந்த நல்லெண்ணெய்யை உடல் முழுக்க தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக நமது உடல் ஓய்வு பெற்று நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.

எனவே உங்கள் உடல் மற்றும் மன அமைதிக்கு எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை தவிர்த்து உங்கள் சருமம் மற்றும் கூந்தலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன