உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ் வகைகள் சாப்பிடுங்கள்

  • by

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்புகள்  தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு தேவையான  ஆற்றல்கள் கிடைக்கும். இது சக்து பற்றாக்குறையை போக்கும்.  பருப்புகள் தொடர்ந்து சாப்பிட்டு சருமத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். இதனை  தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நல்லது ஆகும். 

நட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையும், பற்றாக்குறை சத்துக்கள் கிடைக்கப் பெறலாம். நட்ஸ் வகைகள் பல உள்ளன அவற்றின் பயன்கள் பல உள்ளது இவற்றை அறிந்து சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும். 

நட்ஸ் வகைகள்

வேர்க்கடலை, வால் நட், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களின் சத்துக்கள் அறிந்து கொண்டால் அதனை தினமுன் நீங்கள் சாப்பிட்டு வருவது நிச்சயம் எழுதி கொடுக்கின்றேன்.  மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் இல்லையென்றாலும் ஒன்று இரண்டாவது தினசரி சிறிதளவில் எடுத்து கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: பாதாம், வாலநட்டில் உணவு குறிப்புகள்.!

நட்ஸ் சாப்பிடுவது அசைவ உணவுக்கு நிகரானது:

நட்ஸ்  சாப்பிடும் ஆண்களுக்கு ஆற்றல் அதிகம் கிடைக்கும் எ ன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் சாப்பிடும் நட்ஸ்களில் ஒமேகா 3 ஆசிட்டானது உள்ளது. இவை மீன்களுக்கு நிகரானது ஆகும். இந்த சத்தானது இதயத்தின் ஆரோக்கியத்தை நீட்டிக்கச் செய்யும். சருமத்தை அழகூட்டும். கொலஸ்டிராலை ஒழுங்குபடுத்தும். 

நாம் சாப்பிடும் நட்ஸ்மளிலுள்ள வைட்டமின் ஈ  இளமையை நீட்டிக்கச் செய்கின்றது. இதை நோட்டு பன்னுங்க முகத்திற்கு  அது இதுன்னு வாங்கி பயன்படுத்துவதை விட இந்த நட்ஸ் சரியாக சாப்பிட்டு வாங்க  நல்லது நடக்கும்.

மேலும் படிக்க: காய்ந்த நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மன அமைதியை கூட்டும்: 

 பருப்பு வகைகள் மனதை சாந்தப்படுத்துகின்றன. வேலையினால் ஏற்படும் மூளை சோர்வை நீக்கச் செய்யும். பிஸ்தாவில் உள்ள சத்துக்கள் புற்று   நோய் தடுப்பாக இருக்கும். உடலில் கொழுப்பு சக்தியை ஒழுங்குபடுத்தி ஆரோக்யமாக இருக்க இது அவசியம் ஆகும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகியவை தினமும் இரண்டு இரண்டாக சாப்பிட வருவது கட்டாயம் ஆகும். 

நரம்பு மண்டலம் சீராக்கும் நட்ஸ்: 

நட்ஸ் சாப்பிட்டு வரும் பொழுது நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குகின்றன. வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது. நினைவாற்றல் அதிகரிப்பினை இந்த நட்ஸ் வகைகள் தூண்டுகின்றன. இதனை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கான விந்தணு தரம் உயரும்.   உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருக வேண்டுமெனில் பருப்புகளை சாப்பிட்டு வாருங்கள் நல்லது தரும். 

நட்ஸ் வகைகள்

கர்ப்பிணிகள்  நட்ஸ் சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். நரம்பு மண்டலத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை இந்த நட்ஸ் வகைகள் கொடுக்கின்றன.  பாதாம் பருப்பை 4 முதல் 7 வரை சாப்பிடலாம். வால் நட் 3 முதல் 5 வரை சாப்பிடலாம். பேரிச்சபழமானது 2 சாப்பிட்டு வர வேண்டும். பிஸ்தா ரகங்கள் 5 முதல் 10 சாப்பிடலாம், உலர் திராட்சை 10  சாப்பிடுதல் நல்லது ஆகும். தினமும் நட்ஸ் உலர் பழம் வகைகள் 20 கிராம் சாப்பிட்டு வர உடலில் சத்துக்கள் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கூடி ஆரோக்கியம் பெருகும். 

நட்ஸ் வகைகளை சாப்பிடும் பொழுது சாப்பிடுதல் கூடாது. நட்ஸ்   உணவு சாப்பிட்ட பின் 3 மணி நேரத்திற்கு பின் சாப்பிடுதல் நல்லது ஆகும். நட்ஸ்  காலை இடைவேளை 11 மணி மத்திய இடை வேளை 3 மணி மாலை 6 மணி என்று சாப்பிடலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நேரங்களில் நாம் சாப்பாடு சாப்பிட மாட்டோம் என்பதால் இந்த நேரங்களில் நட்ஸ்  சாப்பிட்டு ஆரோக்கியத்தை அதிகபடுத்தி புத்துணர்ச்சியுடன் செயல்படலாம். 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன