வேப்பிலையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of neem leaves

வேப்பிலையின் நன்மையை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொதுவாக நீங்கள் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் இனிப்பு உணவுகளை விட கசப்பு உணவுகளே உங்கள் ஆரோக்கியத்தை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. எல்லாவற்றிலும் முதன்மைப் பங்கை வகிப்பது தான் வேப்பிலை, இதை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஏற்படும் பல வியாதிகளை தடுக்கும். இதை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் வேப்பிலையை நீராக அருந்தலாம்.

கோடைக்கால பிரச்சனை

பொதுவாகவே கோடை காலங்கள் வந்தாலே பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். இதை தடுப்பதற்காகவே கோடைகாலங்களில் வேப்ப மரங்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அதை தவிர்த்து கோடைகாலங்களில் வேப்பிலையைக் கொண்டு ஒருசில பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதன்மூலமாக நம்மைச் சுற்றி இருக்கும் கிருமிகளை அழிக்க வேப்ப இலைகள் உதவுகிறது. அதைத் தவிர்த்து நம் உடலைக் குளிர்ச்சியாகவும் எந்த ஒரு தொற்றுகள் அண்டாமல் வேப்ப இலைகள் பார்த்துக் கொள்கிறது. இதனாலேயே நம் முன்னோர்கள் வேப்பமரத்தை கடவுளாக போற்றினார்கள்.

மேலும் படிக்க – கொரோனோ வைரசுக்கு பயந்து கைகுலுக்க தடை விதித்த நாடு..!

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைப்பதற்கு நாம் தினமும் வேப்ப இலை நீரை அருந்த வேண்டும். அதற்கு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அதில் ஏழு வேப்பிலைகளை போட்டு அந்த நீரை வடிகட்டி குடித்தால் போதும். உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து எப்போதும் சமநிலையில் வைக்கும்.

குழந்தைகள் வயிற்றில் புழுக்கள்

குழந்தைகளாக இருக்கும்போது இனிப்புகளை அதிகளவில் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் தொப்புளை சுற்றி காயங்களும் மற்றும் வயிற்றுக்குள் ஏராளமான புழுக்களும் உற்பத்தி ஆகும். இதை தடுப்பதற்கு அவர்களுக்கு வேப்பிலை கொழுந்தை அரைத்து கொடுக்கலாம் இல்லையெனில் வேப்ப இலையை நீரில் கலந்து அவர்களுக்கு அருந்த கொடுக்கலாம். இதன் மூலமாக அவர்கள் குடல் மற்றும் வயிற்றில் இருக்கும் புண்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் அகலும்.

வயிற்றுப் போக்கிற்கு வேப்ப இலை

தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் வேப்ப இலை நீரை அருந்தினால் வயிற்றுப்போக்கு உடனே தீரும். இதற்கு நீங்கள் வேப்பிலையை நீரில் நன்கு கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேவைப்பட்டால் அதில் தேன் கலந்து குடித்தால் போதும். இதன் மூலமாக வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

மலேரியாவில் இருந்து விடுதலை

பல பேர் உயிரை பறித்துக் கொண்ட மலேரியாவை எளிதில் குணப்படுத்தும் வழி வேப்பிலைக்கு உண்டு. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது மூன்று டம்ளர் தண்ணீரில் 7 வேப்பிலையை போட்டு அதை நன்கு கொதிக்க விடவேண்டும். பின்பு அந்த நீர் ஒரு டம்ளர் ஆனபிறகு அதை வடிகட்டி காலை மற்றும் மதிய வேளைகளில் தினமும் குடித்து வந்தால் மலேரியா நோய் விலகும்.

எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கலாம்

உலகில் கொடிய வியாதியாக  பார்க்கப்படும் எய்ட்ஸ் செல்களின் உற்பத்தியை குறைக்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இன்றுவரை இதை பரிபூர்ணமாக குணமடைவதற்கு மருந்துகளை கண்டுபிடிக்காத விஞ்ஞானம், எய்ட்ஸ் உண்டாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

புற்றுநோய் அபாயம்

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை தடுக்கக்கூடிய ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு. இதிலுள்ள பண்புகள் புற்றுநோய் உண்டாக்குவதை தடுப்பது மட்டுமல்லாமல், நோயுற்றவர்களின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலவிதமான நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்கும்

உங்கள் இருதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் வேலையை வேப்பிலை செய்கிறது. உங்கள் உடலில் உள்ள ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து சமநிலையில் வைக்கிறது. அதை தவிர்த்து உடல் பருமன், கொழுப்பு அதிகரிப்பு மற்றும் இதயம் பாதுகாப்பு என எல்லாவற்றுக்கும் சிறந்ததாக விளங்குகிறது.

மேலும் படிக்க – தைராய்டினால் ஏற்படும் நன்மைகள்..!

பல பிரச்சினைகளுக்கு தீர்வு 

வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தியால் ஏற்படும் வியாதியை தடுக்கிறது. அதைத் தவிர்த்து கல்லீரல் பாதிப்பு மற்றும் மூல நோய்களை குணப்படுத்துகிறது. கீல்வாதம், மூட்டுவலி, பக்கவாதம், நரம்பு பிரச்சனை என எல்லாவற்றுக்கும் தீர்வாக வேப்ப இலை இருக்கிறது.

உங்கள் சருமத்தில் ஏற்பட்ட காயங்களை உடனே குணப்படுத்த வேப்பிலை பத்து போடலாம். இல்லையெனில் வேப்பிலை நீரை கொண்டு கழுவலாம். இதைத் தவிர்த்து ஏராளமான சிகிச்சைகளை வேப்பிலையைக் கொண்டு செய்யலாம். எனவே இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை அல்லது வேப்பிலையால் செய்யப்பட்ட நீரை அருந்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன