இசையின் மூலமாக செய்யப்படும் சிகிச்சையில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of music treatment

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காக நாம் மருத்துவமனைகள் அல்லது மருந்துகளை பயன்படுத்தி அதில் இருந்து குணமடைகிறேம், இதுபோல் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெறும் இசையின் மூலமாக குணப்படுத்த முடியுமா.? முடியும் என்கிறது பல ஆய்வுகள்.

மனஅழுத்தத்தைப் போக்கும்

இசை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசையை நாம் 15 நிமிடங்கள் கேட்டால் போதும் உங்கள் கவலைகள் அனைத்தும் விலகி உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும். பல ஆய்வுகளின் முடிவில் உங்களுக்கு பிடித்த இசையை அதிக ஒலியுடன் கேட்பதன் மூலமாக உங்கள் கவலைகள் அனைத்தும் விலகி மன அமைதி கிடைக்கும் என்று நிரூபணமாகியுள்ளது.

மேலும் படிக்க – கரோனா வைரஸ், முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்???

சுறுசுறுப்பை உண்டாக்கும்

நீங்கள் சோர்வாக இருந்தால் உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். உங்கள் மூளையில் டோபோமைன் சுரப்பி சுரந்து உங்களை சுறுசுறுப்பாக மாற்றிவிடும். அதைத் தவிர்த்து உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.

ஆய்வுகள்

இசைக்கருவி வாசிப்பவர்களும் மற்றும் இசையை வெறுபவர்களும் வைத்து செய்யப்பட்ட ஆய்வில், யார் அதிக இசைக்கருவி உடன் இருக்கிறார்களோ அவர்கள் மிக மகிழ்ச்சியுடன், மனப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் இசை பிடிக்காதவர்கள் எப்போதும் முரட்டுத் தன்மையுடன் கோபமாக காணப்பட்டார்கள்.

உடற்பயிற்சியுடன் இசை

உடற்பயிற்சி செய்பவர்கள் எப்போதும் இசையுடன் இருப்பார்கள். ஓடுபவர்கள், நடப்பவர்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி மேற்கொள்பவர்கள் எப்போதும் இசையைக் கேட்டு இருப்பார்கள். இதற்கு காரணம் எவரொருவர் அதிக அளவில் இசை கேட்கிறார்களோ அவர்கள் புத்துணர்ச்சி அடைந்து மிக உற்சாகத்துடன் அவர்கள் வேலையை செய்கிறார்கள்.

தூக்கமின்மைக்கு தீர்வு

இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது உங்கள் தூக்கத்தின் ஆற்றலை அதிகரிக்கும். இதன் மூலமாக உங்களுக்கு விரைவில் மற்றும் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

மேலும் படிக்க – மனித உடலில் பயணிக்கும் கரோனா ஆரம்பம் முதல் முடிவு வரை.!

அறிவாற்றல் அதிகரிக்கும்

இசையை ஒரு பாடமாக எடுத்து அதன் மூலமாக வளரும் குழந்தைகளை பரிசோதித்து பார்த்தார்கள். இதனால் அதிக இசையை கேட்க குழந்தைகளின் அறிவு ஆற்றல் பல மடங்கு அதிகரித்தது. இசை உங்கள் மூளை வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது. இதை தவிர்த்து அறிவு ஆற்றல், செயல்திறன் மற்றும் மன அமைதி போன்ற அனைத்திற்கும் இசை உதவுகிறது.

எனவே உங்களின் கவனத்தை சிதறாமல் ஒருநிலைப்படுத்துவதற்க்கு இசை உதவுகிறது. இதனால் தினமும் உங்களுக்கு பிடித்த இசையை குறைந்தது ஒரு மணி நேரமாவது கேளுங்கள். இதன் மூலமாக உங்களின் மூளை மற்றும் செயல் அதிக அளவில் ஆற்றலுடன் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன