காளான் சாப்பிடுங்கள் காலனை வெல்லுங்கள்

  • by

எந்திரவாழ்கையில், எல்லாவற்றிற்கும் செயற்கைதனம் ஊடுருவி காணப்படுகின்றது.முன்பெல்லாம் ஒருவரை அடையாளம் காண்பதற்கு அவரின் பெயர் மற்றும் படித்த படிப்பை சொல்லுவோம் ஆனால் இப்போது இருக்கும் காலங்களில் ஒருவரின் அடையாளத்தை அவருக்கிருக்கும் நோய்களை வைத்தே குறிப்பிடுகிறோம். இந்த அளவிற்கு எல்லோருக்கும் நோய்கள் அதிக அளவில் இருக்கிறது.

ஆரோக்கிய குறைபாடு அல்லது நமக்கு இருக்கும் வியாதிகளைப் குணப்படுத்துவதற்கு நாம் மருத்துவமனைக்கு ஏறி, இறங்கி வருகிறோம் இதை தவிர்த்து, மருத்துவர்கள் கொடுக்கப்படும் மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை அதிகமாக உட்கொள்கிறோம் இதனால் நமது குடல் மற்றும் வயிற்றுப் பகுதி அதிகமாக காணப்படுகிறது. இதை தவிர்த்து இயற்கையாக விளையும் உணவுகளை நாம் சாப்பிட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கும் பல வியாதிகள் குணமடையும்.

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

நமக்கு ஏற்படும் சத்துக் குறைபாடுகள் அல்லது தேவையற்ற உணவுகளை உட்கொள்வதினால் நமக்கு நோய்கள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு நம் ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொண்டால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பு நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் காளான்களை இப்போது அதிக அளவில் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் இருக்கின்றன அது என்னவென்று பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்திற்கு வெள்ளை காளான்கள் மிகவும் அவசியம். நாம் பயன்படுத்தி வரும் காய்கறிகளில் ஏதாவது ஒரு குறைகள் இருக்கும் ஆனால் வெள்ளை காளானில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் குறைவாக இருக்கிறது. அதை தவிர்த்து கல்லீரலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. உலகம் முழுக்க கர்ப்பிணிப் பெண்கள் நீரிழிவு நோயினால் 14% பாதிக்கப்படுகிறார்கள். அது போன்ற சமயங்களில் நாம் வெள்ளை காளானை உட்கொண்டால் நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து இது நம்மை காப்பாற்றுகிறது.

முதியவர்களின் வெள்ளை காளானை உட்கொள்வதின் மூலம் அவர்களுக்கு வயதான சமயத்தில் ஏற்படும் மறதிகள் மற்றும் மன பிரச்சனைகளை தீர்க்கிறது. வெள்ளைக் காளானில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்ளலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதினால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது உதவுகிறது.

இதய பிரச்சினைகளுக்கும் வெள்ளை காளான்கள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது‌. ஏனென்றால், இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் நம் உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்புகளை இது அகற்றுகிறது. அதை தவிர்த்து இரத்த நாளங்களில் கொழுப்புகள் எதுவும் சேராதவாரு இந்த உணவு நமக்கு பயன் தருகிறது. எனவே இதனால் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

காளான்களில் பல்லாயிரம் வகைகள் இருக்கின்றன. இது அனைத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் கண்டுபிடித்து உன்பது என்பது இயலாத காரியமே. உங்களுக்கு காய்கறி அங்காடியில் கிடைக்கும் காளான்களை வாங்கி, வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல வியாதிகளில் இருந்து உங்களை காப்பாற்றும். அதை தவிர்த்து ஏற்படவிருக்கும் வியாதிகளையும் இது தவிர்க்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன