புதினா இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of mint leaves

நம்முடைய சமையலின் நறுமணத்திற்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்தப்படும் புதினா இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதை அறியாமல் நாம் பலவிதமான சமயங்களுக்கு புதினா இலைகளை பயன்படுத்தி வருகிறோம். இது எல்லா சூழ்நிலைகளையும் எல்லாக் காலங்களிலும் வளர்வதினால் நமக்கு தடையில்லாமல் கிடைக்கும் ஒரு அற்புத இலை ஆகும். இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு

ஒருசில வயதை எட்டிய பிறகு எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை தான் செரிமான பிரச்சனை. இதைத் தீர்ப்பதற்கு நாம் புதினா இலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சக்திகள் உங்கள் செரிமான சக்தியை அதிகரித்து உங்கள் உணவை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது.

மேலும் படிக்க – கரோனா வைரஸால் பரப்பப்படும் வதந்திகள்..!

கல்லீரலுக்கு நல்லது

தினமும் குடிக்கும் நீரில் இரண்டு புதினா இலையைப் போட்டு குடிப்பதன் மூலமாக உங்கள் கல்லீரலில் இருக்கும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி உங்களை ஆரேகியமாகப் பார்த்துக் கொள்கிறது. இதைத் தவிர்த்து தினமும் வெறும் வயிற்றில் இரண்டு புதினா இலைகளை மென்று சாப்பிடு வதனால் உங்களுக்கு இதே நன்மை கிடைக்கும்.

உடல் சூட்டை குறைக்கும்

கோடைகாலம் வந்துவிட்டாலே நம்முடைய உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அதை தடுப்பதற்கு நாம் தினமும் புதினா சேர்க்கப்பட்ட நீர் அல்லது உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்கள் உடல் சூடு குறைந்து உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

சுவாச பிரச்சினைக்கு தீர்வு

ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் புதினாவை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலமாக உங்களை புத்துணர்ச்சியுடன் மற்றும் சுவாசத்தை அதிகரிக்க உதவும். ஒரு சிலருக்கு இது அழற்சியை ஏற்படுத்தும் எனவே இதை போதுமான அளவு எடுத்துக் கொள்வதே சிறந்தது.

பற்களுக்கு சிறந்தது

நாம் பயன்படுத்தப்படும் பலவிதமான பொருட்களில் புதினாவை சேர்க்கிறார்கள். அதிலும் நம்முடைய பற்களுக்கு பயன்படுத்தப்படும் பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவைகள் புதினா இல்லாமல் இருக்காது. ஏனென்றால் புதினா உங்கள் பற்கள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், ஈறுகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்கிறது.

வாயு தொல்லை

வாயுத்தொல்லை உள்ளவர்கள் புதினாவை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே போல் உங்கள் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்றவை அனைத்தையும் அகற்ற புதினா உதவுகிறது.

மேலும் படிக்க – பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

புற்றுநோயை அகற்றுகிறது

உங்கள் உடலில் உள்ள செல்களின் சக்திகளை அதிகரித்து புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை உண்டாகாமல் தடுக்கிறது. அதைத் தவிர்த்து உங்கள் உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி உங்களைத் தூய்மைப் படுத்தும் குணத்தைக் கொண்டது தான் புதினா. எனவே இதை உணவில் அல்லது வெறுமனே சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன