கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of kovaikkai

நாம் காய்கறி கடைகளுக்கு சென்றால் அங்கே பச்சை நிறத்தில் சிறியதாக கோவக்காய் குவித்து வைத்திருப்பார்கள் அதன் விலையும் மிக மலிவாக இருக்கும் அதை தவிர்த்து இந்த கோவைக்காய் எல்லா புதர்களிலும் கேட்பதற்கு ஆள் இல்லாமல் வளர்ந்து இருக்கும். ஆனால் இதன் பயனை அறியாதவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் குப்பையில் வீசி செல்கிறார்கள் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கோவைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

சரும பிரச்சனையை தீர்க்கும்

கோவைக்காயை தினமும் நம் உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் எல்லா சரும பிரச்சனையையும் இது தீர்த்து வைக்கும். சொரியாசிஸ் படை சிரங்கு தேமல் போன்ற பிரச்சனைகளை தடுக்கும் இதை உணவில் சேர்ப்பது மட்டுமல்லாமல் இதை பல லட்சமாக அரைத்து தினமும் மூன்று வேளை குடித்தால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க – விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

கோவைக்காய் பழரசம் குடிப்பதன் மூலமாக உங்கள் கூந்தலில் ஏற்படும் முடிஉதிர்தல் பொடுகு பிரச்சனை தலை முடி வளர்ச்சி அடைதல் நரைமுடி போன்ற எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்யும். கோவைக்காய் பழ ரசம் செய்யும்போது மீதமுள்ள சட்டையுடன் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் உடல் குளிர்ச்சி அடைந்து கூந்தல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பற்கள் ஆரோக்கியம்

பல் வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் பற்களில், தோன்றும் மஞ்சள் கறைகள் என எல்லாவற்றையும் அகற்ற கோவைக்காய் உதவுகிறது. எனவே உங்கள் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கோவைக்காய் மிகவும் நல்லது.

தொப்பை குறையும்

ஒரு சிலரின் உடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அவர்களின் வயிற்றுப் பகுதி மட்டும் சற்று வீங்கி இருக்கும் இது போன்றவர்கள் தினமும் கோவைக்காய் பழச் சாறு அருந்துவதன் மூலம் அவர்களின் தொப்பை குறையும்.

அதிக சிறுநீர் போக்கை கட்டுப்படுத்தும்

ஒரு சிலருக்கு மிக முக்கியமான தருணங்களில் சிறுநீர் ஒட்டிக்கொண்டு வரும் இவர்கள் பல நேரங்களில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவே இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு கோவக்காயை தினமும் சாப்பிடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கும் அடிக்கடி இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் இவர்களுக்கும் கோவைக்காய் ஒரு சிறந்த உணவாகும். இது உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

மேலும் படிக்க – தினமும் சுண்டல் சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!

சிறுநீரகக் கல்

சிறுநீரக கல் உள்ளவர்கள் தினமும் காலையில் கோவை பழம் சாறு அருந்தி வந்தால் விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் இருக்கும் கல் வெளியேறி விடும். இதை தவிர்த்து அதிகமான மசாலா பொருட்கள் உண்பதால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் இதை கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். அதேபோல் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை அகற்றி விடும்.

எனவே விலை விலை மலிவாக கிடைக்கும் இந்த சிறிய கோவைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன எனவே அதனை கருத்தில் கொண்டு இனிமேல் முடிந்தவரை உணவில் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன