கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

  • by
health benefits of kambu

பண்டைக்கால மக்கள் உணவுக்காக அதிக அளவில் சிறுதானியங்களை பயன்படுத்தி வந்தார்கள். நாளடைவில் நாம் சிறுதானியங்களை சில பயன்களுக்கு பயன்படுத்தி முழுநேரமும் அரிசி மற்றும் கோதுமையை பயன்படுத்த தொடங்கி விட்டோம். இந்தியாவில் உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களாக அரிசி மற்றும் கோதுமை உருவெடுத்துள்ளது. நாம் குறைவாக உணவில் சேர்த்துக்கொள்ளும் சிறுதானியங்களில் மிக ஆரோக்கிய குணங்களைக் கொண்ட கம்பினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது.

கம்பு உணவுகள்

கம்பை கொண்டு பலவிதமான ருசியான உணவுகளை நாம் சமைக்கலாம். அதில் கம்பங்கூழ், கம்பு அடை, கம்பு தோசை, கம்பு களி பின்பு அதை முலையிட்டு பயிராகவும் சாப்பிடலாம். இப்படி அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கம்பை வெவ்வேறு விதமாக சாப்பிட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் உடலில் குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகள்..!

உடல் வலிமையாகும்

கம்பில் பலவகையான அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன, எனவே இதை சாப்பிடும் போது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் அகற்றி உடலை இறுக்கி வலிமையாக மாற்றுகிறது. இதனால்தான் இன்றும் கம்பை சாப்பிட்டுவரும் விவசாயிகள் இப்போதும் வலிமையாகவும், இறுக்கமாகவும் இருக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவு

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்ணக்கூடாது. நாம் பயன்படுத்திவரும் அரிசியில் கூட சர்க்கரை இருக்கிறது, எனவே அதைத் தவிர்த்து நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் கம்பைக் கொண்டு உணவுகளை சமைத்து சாப்பிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கம்பில் பலவகையான வேதிப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து எந்த ஒரு நோயும் அண்டாமல் நம்மைப் பார்த்துக் கொள்ளும்.

உடல் எடையை குறைக்கும்

கம்பில் இருக்கும் நார் சத்து நாம் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவையும் உடனடியாகச் செரிமானம் செய்துவிடும். எனவே நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து கம்பினால் செய்யப்பட்ட ஏதேனும் உணவுகளை சாப்பிடலாம், இதைத் தவிர்த்து கம்பை மட்டும் சாப்பிடும்போது நமது உடலில் உள்ள கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

குடல் புற்றுநோயை தடுக்கும்

எதற்கெடுத்தாலும் புற்றுநோய் வரும் இக்காலத்தில் தவறான உணவுகளினால் குடல் புற்றுநோய் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்கு தினமும் ஒரு வேளை கம்பை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – கற்பூரவல்லி இலையில் இருக்கும் மூலிகை குணம்

ரத்தத்தை சுத்திகரிக்கிறது

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கம்பை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் உள்ள இறுக்கும் தன்மையை அகற்றி இரத்தத்தை சீராக செல்ல உதவுகிறது. அதேபோல் ரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றி இரத்தத்தை சீராக்குகிறது இதனால் உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பெண்களுக்கு சிறந்தது

பெண்களுக்கு இளமையான தோற்றம் வேண்டும் என்றால் தினமும் கம்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதை தவிர்த்து முடி கொட்டுதல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் கம்பு உண்பதினால் தடுக்கப்படுகிறது. பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க வேண்டும் என்றால் கம்பை உட்கொள்ளுங்கள்.

இத்தனை மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த சிறுதானிய உணவுகளை முடிந்தவரை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து பயன் படுத்துங்கள். இது உங்களுக்கு தெரியாமல் உங்கள்  ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன