தினமும் கம்பு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of kambu millet

நாம் உணவுகளுக்கு எப்படி அரிசியையும், கோதுமையையும் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோமோ அதே போல் நமக்கு முந்தைய தலைமுறையினர்கள் கம்பு உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தார்கள். சிறு தானியங்களாக கருதப்படும் உணவுகளில் கம்பு மிக முக்கியமான உணவாகும், அதை தவிர்த்து இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கம்பை நம் கூழாக குடிக்கலாம் அதைத் தவிர்த்து களி, அடை, தோசை மற்றும் அதை முளை இட்டு பயிராகவும் சாப்பிடலாம். இதை நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பின் தொடர்ந்து இன்றும் மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள்.

உடல் பலம்

கம்பை கூழ் மூலமாக அருந்துவதைத் தவிர்த்து அதை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்நீரை குடிப்பதன் மூலமாகவும் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தினமும் காலையில் கம்பு கூழ் அல்லது கலி சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் அகற்றி உங்கள் தசைகளை இறுக்கி உங்களை வலிமையாக்குகிறது.

மேலும் படிக்க – ஒரே குடும்பத்தில் கொரானாவிலிருந்து குணமடைந்தனர்

நீரிழிவு பிரச்சனை

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நீரிழிவு பிரச்சினை ஏற்படுகிறது. இவர்கள் சர்க்கரை அதிகமாக இருக்கும் அரிசி உணவுகளை உண்பதைத் தவிர்த்து மாற்றாக கம்பு போன்ற உணவுகளை அருந்தலாம். இதன் மூலமாக அவர்கள் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவும் குறைந்து நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

கம்பில் நார்ச்சத்து இயற்கையாகவே அதிகமாக உள்ளதால் நீங்கள் உண்ணும் உணவுகள் அனைத்தையும் மிக எளிதில் ஜீரணமாக உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சினைகள் அனைத்தையும் வரவிடாமல் தடுக்கிறது. கம்பில் இருக்கும் சத்தானது உங்கள் குடலில் ஏற்படும் புண் மற்றும் காயங்கள் அனைத்தையும் போக்குகிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்தக் கம்பை தினமும் காலையில் உட்கொள்ளுங்கள்.

உடல் எடை குறையும்

நமக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நாம் தேவையற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்கிறோம். இதனால் உங்கள் உடல் பருமன் அடைந்து குண்டாக காணப்படுகிறீர்கள். தினமும் காலையில் கம்பு சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு பசி எடுக்கும் தன்மை குறையும், அதைத் தவிர்த்து மேலும் எந்த ஒரு உணவுகளையும் சாப்பிடாதவாறு உங்களை எப்போதும் திருப்தியாக வைத்துக் கொள்ளும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கம்பை எடுத்துக் கொள்ளும்போது உங்கள் ரத்த அழுத்தம் குறைகிறது. எனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.

மேலும் படிக்க – வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

பெண்கள் பிரச்சினை

புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும், இதை தடுப்பதற்கு நீங்கள் கம்பை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு உடனடியாக தாய்ப்பால் சுரக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி மற்றும் அதிகமான ரத்தப் போக்கு என அனைத்தையும் சரி செய்யக் கம்பு உதவுகிறது. கம்பில் இருந்து உண்டாகும் ஒரு விதமான புரதம் உங்கள் தலை முடியின் ஆரோக்கியத்தையும் வலுவாக்குகிறது.

உடல் உஷ்ணமாக உள்ளவர்கள் தினமும் காலையில் கம்பங்கூழ் குடிப்பதன் மூலமாக அவர்களின் உஷ்ணம் அனைத்தும் விலகும். எனவே கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு கருதப்படுகிறது. மிக மலிவான விலையில் ஆரோக்கியமாக உணவுகளை நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தார்கள். அதையும் நாமும் பின்தொடர்ந்தது நம்மையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன