பலாப்பழத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

  • by
health benefits of jack fruit

பழங்கள் என்றாலே அவைகள் அதிகம் பயன் தருபவைகள்தான். அதிலும் ஒருசில பழங்கள் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுக்கின்றன. அந்த வகையில் பலாப்பழம் மிகவும் சிறந்த பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் இரண்டாவதாக இந்த பலா இடம்பெறுகிறது. குறிப்பிட்ட சில கால கட்டத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த பலாப்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றன. 

பயன்கள்

இந்த பலாப்பழத்தை நாம் என்பதால் இது நமது மூளைக்கும் உடலுக்கும் அதிக பலத்தைத் தருகிறது. அதோடு நரம்புகளை உறுதியாக்கும் புதிய ரத்தத்தை விருத்தி செய்யவும் இந்த பலா பழம் பயன்படுகிறது.

விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகமாக காணப்படுவதால் இது பார்வைத் திறனுக்கு மிகவும் நல்லது.


மேலும் படிக்க – அவல் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்!

சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். அடிபட்டவர்கள் இந்த பலா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

கைக் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த பலாப்பழம் மிகவும் உதவுகிறது. இந்த பலாக் காயை சமைத்து சாப்பிட்டுவர பால் நன்றாக சுரக்கும். பலாக்காய் அதிகமான உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது.

சிறிய பலாக் காயை சமைத்து சாப்பிடும் பொழுது அதனால் பித்தமயக்கம் அடிக்கடி ஏற்படும் கிறுகிறுப்பு பித்த வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

பலாக்காயில் இருந்து தயாரிக்கப்படும் பல சிப்ஸ் மற்றும் பிற உணவுகளை சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

யாரெல்லாம் இதை தவிர்க்க வேண்டும் என்றால், சக்கரை வியாதி உள்ளவர்கள் பலாப்பழத்தை உன்ன வேண்டாம். ஏனெனில் பலாச்சுளையில் பழ சர்க்கரை யின் அளவு அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்

பலாப்பழத்தில் உள்ள உயிர்சத்துக்கள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கு நமக்கு உதவுகிறது. மேலும் அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுப்பதன் மூலம் எப்பொழுதும் இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும்.

பலாப்பழம் அதிகமாக சாப்பிடும் பொழுது சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு நெய் அல்லது சிறிதளவு பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் தங்களுக்கு ஏற்படாது.

பலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி அடையும். மேலும் இதனால் இந்த பலாப்பழம் எளிதில் ஜீரணம் அடைந்து குடலுக்கு வலிமை தரும்.

பலாப்பழத்தில் அதிக அளவு புரதச் சத்துக்களும் மாவுச் சத்தும் வைட்டமின்களும் காணப்படுகின்றன விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் பி வைட்டமின்கள் அதிக அளவில் இதில் அடங்கியுள்ளன. இதனைத் தவிர கால்சியம் பாஸ்பரஸ் துத்தநாகம் போன்ற கனிமப் பொருட்களும் பலாப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க – தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

விட்டமின் ஏ நரம்புகளை உறுதியாகி நமக்கு பயனைத் தருகிறது. இதனால் நமது உடலும் மூளையும் அதிக வலிமை பெறும். சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க இந்த பலாப்பழம் நமக்கு உதவுகிறது.

ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பல் தொடர்பான நோய்களை சரி செய்வதற்கும் இந்த பலாப்பழம் நமக்கு உதவி செய்கிறது. ஏதேனும் தொற்று கிருமிகள் இருப்பின் அதனை அழிக்கும் சக்தியும் இந்த பலாப்பழத்திற்கு உண்டு. நெய் மற்றும் தேன் கலந்த பலாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமது இதயம் மற்றும் மூளை வளர்ச்சி அடைகிறது. மேலும் நரம்புகளும் வலுப்படுகிறது. நமது உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் இதுபோன்ற இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்களை நாம் நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை கையாள முடியும்.

இதுபோன்று பயன்தரும் பல வகைகள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அவளுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன. அந்த கால கட்டங்களில் அந்த பழங்களை உண்டு அதற்கான பலன்களை பெற்றிடுங்கள். முக்கனியில் சிறந்த கயானா பலாப்பழம் பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளிப்புறம் கரடுமுரடாக இருந்தாலும் உள்புறம் சுவை மிகுந்ததாக இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு மனிதரை கணிக்கும் பொழுது அவர்களது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. மீண்டும் நல்ல ஒரு பயனுள்ள கட்டுரையுடன் உங்களை சந்திக்கிறேன் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன