வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

  • by
health benefits of having steam bath

உடற் பயிற்சிகள் செய்பவர்கள், அயராமல் உழைப்பவர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற அனைவரும் குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய நீரை எப்போதும் சூடு ஏற்றி தான் குளிப்பார்கள். இதனால் இவர்கள் உடலில் இருக்கும் அழுக்குகள் விலகுவது மட்டுமல்லாமல் அவர்களை ரிலாக்சாக வைத்துக் கொள்ளும். இதைத் தவிர்த்து தினமும் வெந்நீரில் குளிப்பதன் மூலமாக உங்கள் உடலில் ஏகப்பட்ட நன்மைகள் நடக்கும்.

இரத்த அழுத்தம் குறையும்

உலகில் நடத்தப்பட்ட ஆய்வில் சுடுதண்ணீரில் குளிப்பவர்கள் இரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்கிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் இருக்கும் மக்கள், அனைவரும் தினமும் சுடு தண்ணீரில் தான் குளிக்கிறார்கள். இதனால் இவர்களின் ரத்த ஓட்டம் சீராகி மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – நிரந்தரமான ஆரோக்கியத்திற்கு உதவும் பானம்..!

 கலோரிகள் குறையும்

நம் உடலில் இருக்கும் கலோரிகளைக் குறைப்பதுதான் தினமும் நாம் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். ஆனால் உடற்பயிற்சிக்கு இணையாக நம் உடலில் இருக்கும் கலோரிகளையும் வெந்நீரில் குளிப்பதன் மூலமாக குறைக்க முடியும். இனிமேல் கலோரிகளை குறைப்பதற்கு தினமும் வெந்நீரில் குளியுங்கள் இதனால் கிட்டத்தட்ட 140 கலோரிகள் வரை குறைகிறது.

வலியை குறைக்கும்

உடற்பயிற்சிகள் செய்தவர்கள், உடலில் வலிகள் உள்ளவர்கள் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலமாக அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள அனைத்து வலிகளும் குறையும். இதைத் தவிர்த்து உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும். இது போன்ற நேரங்களில் நீங்கள் 40 டிகிரி வரை உள்ள நீரில் தான் குளிக்க வேண்டும். அதிக சூடாக குடித்தால் உங்கள் உடலில் வேறு சில மாற்றங்களை உண்டாக்கும்.

கிருமிகளைக் கொல்லும்

நம் உடலில் இருக்கும் கிருமிகளை கொள்வதற்காக தான் நாம் தினமும் குளிக்கிறேம் ஆனால் சாதாரண தண்ணீரைவிட வெந்நீரில் குளிப்பதன் மூலமாக நம்மால் ஏராளமான கிருமிகளைக் கொல்ல முடியும். உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக வெந்நீரில் குளியுங்கள். இதனால் கிருமிகள் அனைத்தும் அழிந்து தேவையற்ற அழகுகளையும் உடனடியாக போக்கும்.

மேலும் படிக்க – பெண்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்..!

தூக்கமின்மை

வெந்நீர் இயற்கையாகவே உங்கள் சருமத்தையும் மற்றும் தசைகளை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து பலநாள் மன அழுத்தத்தில் தவிப்பவர்களுக்கு மன நிறைவைத் தருகிறது. அதைப்போல் தூங்குவதற்கு கஷ்டப்படுபவர்கள் தூங்குவதற்கு வெந்நீர் உதவுகிறது. இனிமேல் மன உளைச்சல், மன கஷ்டம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் வெந்நீர் பயன்படுத்தி உங்கள் வேதனைகளைக் குறையுங்கள்.

அதேபோல் சளி, தொண்டை பிரச்சனை, இருமல் போன்ற அனைத்து பிரச்சனையும் உடனடியாக தீர்ப்பதற்கு நீங்கள் வெந்நீரை பயன்படுத்தலாம். எனினும் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து அதன் வலிகளை குறிப்பதற்குப் பயன்படும் இந்த வெந்நீரை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தி குளிக்கலாம். இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு வேறு வித பக்க விளைவுகளை உண்டாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன