வாழ்வை இனிமையாக்கும் வாழையிலை குளியல்!

 • by
health benefits of having banana leaf bath

“இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவை தான் மரங்கள் “அவை இயற்கை நமக்கு கொடுத்த பொக்கிஷம். ஆனால் நாம் அதை முறையாக பயன்படுத்த தவறுகிறோம். மண் குளியல், எண்ணெய் குளியல்,  சூரியக்குளியல் இவற்றின் வரிசையில் அடுத்ததாக வாழை இலை குளியல்.

நம் வாழ்வில் ஒருமுறையாவது கட்டாயமாக எடுக்கவேண்டிய குளியல் தான்
இந்த வாழை இலை குளியல்.

வாழை இலையில் சாப்பாடு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குளியல் என்று
யோசிக்கிறீர்களா??? உடலின் உட்புறக் கழிவுகளை நீக்க  மிகச்சிறந்த
முறைதான் இந்த குளியல் அதை விளக்கும் பதிவுதான் இது.

மேலும் படிக்க – இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

வாழையிலையில் உணவு உண்பதற்கான காரணங்கள்

எத்தனையோ இலைகள் இருந்தாலும் நம் முன்னோர்கள் ஏன் உணவு உண்ண
வாழை இலையை தேர்வு செய்திருக்கிறார்கள். வாழை இலையில்
இயற்கையாகவே பாலிஃபீனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. நாம் சூடான
சாதத்தை வாழையிலையில் போடும்போது  நாம் சாப்பிடும் உணவானது வாழை
இலையில் உள்ள பாலிஃபீனால் உறிஞ்சுகிறது. அதை நாம் உண்ணும்போது
பாலிஃபீனால் நேரடியாக நம் உடலுக்குள் செல்கிறது.இதனால் செல் செறிவு
அதிகரிப்பு தோல் நோய்கள் வராமல் நம் உடலைப் பாதுகாக்கிறது. மேலும்
வாழை இலையில் உள்ள குளோரோஃபில் வயிற்றில் ஏற்படும் அல்சரை
குணப்படுத்துகிறது. 

வாழை இலையில் ஆக்சிஜன் இருப்பதற்கான ஆதாரம்


முன்பெல்லாம் மல்லிகை பூ வை  விற்கும்போது வாழை இலையில் தான் சுற்றி
கொடுப்பார்கள்.அதன் காரணம் வாழையிலையில் இயற்கையாக உள்ள
ஆக்சிஜன் வாடாமல் இருக்க பயன்படுகிறது பூவிற்கு உயிர் கொடுக்கும் இந்த
வாழை இலை மனித உடலில் செய்யும் விந்தைகளை  பார்க்கலாம்.

வாழை இலை குளியலுக்கு முன் செய்ய வேண்டியவை 

வாழை இலை குளியல் மேற்கொள்வதற்கு முன்னர் அதிக அளவு தண்ணீர் பருக
வேண்டும். சூரிய ஒளியின் முன்னிலையில் நடைபெறும் இந்த குளியலில் வியர்வைகள் மூலமாகத்தான் நம் உடலின் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் வராமல் இருப்பதற்காக அதிக
அளவு தண்ணீர் பருகுவது அவசியமாகிறது.

வாழை இலை குளியலின் பயன்கள்  

சூரிய ஒளியில் மேற்கொள்ளப்படும்  இக் குளியலில் வாழையிலை வழியாக
வெப்பமானது நம் உடலினுள் சென்று நம் உடலில் இருக்கும் வியர்வை
சுரப்பிகளைத் தூண்டி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால்
உடல் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.

சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் இந்த வாழை இலை குளியலை அதிகம்
எடுத்துக்கொண்டால் உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான உப்பு சத்துக்கள்
வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது.

வாழை இலை குளியலை எவ்வாறு மேற்கொள்வது 

வாழை இலை குளியல் தனியாக மேற்கொள்ள முடியாது. குளியலை சூரிய
ஒளியில் தான் எடுக்க வேண்டும். குறைந்தது இருபது நிமிடமாவது குளியலை
மேற்கொண்டால் தான் இதன் முழு பயனையும் அடைய முடியும். ஒரு மனிதர்
வாழையிலை குளியல் எடுக்க சுமார் 12 முதல் 15 வரை இலைகள்
தேவைப்படுகின்றன.

மெலிதான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உடன் இருப்பவரின்
துணை கொண்டு உடல் முழுவதையும் வாழை இலையால் கட்டிக்கொள்ள
வேண்டும். தலை மற்றும் முகத்தையும் முழுமையாக வாழை இலையால் மூடி
விட்டு, மூச்சு விடுவதற்கு மட்டும் அளவாக வாழையிலையில் துவாரங்கள்
போட்டுக்கொள்ள வேண்டும்.

அதிக வியர்வை வெளியேற்றத்தின் தாகம் ஏற்பட்டால் உடன் இருப்பவரின்
துணையுடன் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். குளியலின் போது சிலருக்கு மூச்சு திணறல், இதயம் வேகமாகத் துடித்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் உடனே குளியலில் நிறுத்திவிட வேண்டும். சூரிய ஒளியின் தாக்கத்தால் சிலருக்கு மயக்கம் வருவது போல் இருக்கும் அவர்களும் குளியலை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க – கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

 யாரெல்லாம் வாழையிலை குளியல் மேற்கொள்ளக்கூடாது 

 1. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
 2. இதயம்பாதிப்படைந்தவர்கள் 
 3. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 
 4. மனதளவில் தைரியம் இல்லாதவர்கள், குழந்தைகள்
   வாழை இலை குளியல் எடுக்காமல் இருப்பது நல்லதாகும்.
   மற்றவகை குளியலில் எல்லாம் உடலின் மேற்பகுதியில் உள்ள கழிவுகள்
  மட்டுமே நீக்கப்படும். ஆனால் இந்த வாழை இலை குளியல் மட்டும் தான்
  உடலின் உட்புறம் இருக்கும் கழிவுகள் நீக்கப்படுகின்றன.
   மாதம் ஒரு முறையாவது குளியலை மேற்கொண்டால் உடனே உடலின் உட்புற
  கழிவுகளை எளிதாக நீக்கி விடலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன