உடல் ஆரோக்கியத்திற்கு குல்கந்து..!

health benefits of gulkand

ரோஜா இதழ்களில் மூலம் செய்யப்படும் ஆரோக்கிய உணவே குல்கந்து. இதை நாம் ஒவ்வொரு கல்யாண வீடுகளிலும் உணவு அருந்தி விட்டு வெளியே வரும்போது வெத்தலையின் உன் மடித்துத் தருவார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது கூட தெரியாமல் இன்று வரை நாம் அதை சாப்பிட்டு வந்துள்ளோம். இது சுவைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குல்கந்தை ரோஜா இதழ்கள், தேன், கல்கண்டு, வெள்ளரி விதை, கசகசா போன்றவைகளை ஒன்றாக சேர்த்து செய்கிறார்கள். இதை நீங்கள் நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

ரோஜா இதழ்கள் இயற்கையாகவே இதயத்திற்கு நல்லது. இதனால் இதய பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது இதமான மருந்தாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் குல்கந்து ஒரு சிறந்த மருந்தாகும். இது முகப்பரு மற்றும் உடல் நாற்றம் போன்றவர்களை தவிர்க்கும்.

குல்கந்து ஆண்மை சக்தியை அதிகரிக்கிறது. ரோஜா இதழ்களில் இருக்கும் ஒரு வகையான எண்ணெய் தான் உங்களுக்கு காதல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதைக் கொண்டுதான் ஆண்மை சக்தி அதிகரிக்க முடியும். அதே போல் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இது தவிர்க்கிறது, வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

குல்கந்தின் வயிற்றுப்போக்கு பிரச்சினையை தீர்க்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், அதே போல் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். இதனால் தான் இதை விருந்து முடிந்தவுடன் வெற்றிலையில் மடித்து தருவார்கள். அதேபோல் இது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உங்களை விடுவிக்கும், அல்சர் பாதிப்பில் இருந்தும் உங்களை காப்பாற்றும்.

மேலும் படிக்க – கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

குல்கந்தை நாம் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் அதற்கு நாம் ரோஜா இதழ்களை எடுத்துக் கொண்டு அதை உடலில் நன்கு காயவைக்க வேண்டும். பின்பு அதனுடன் கற்கண்டு சேர்த்து ஜாம் போல் வரும்படி நன்கு நசுக்கி கொள்ள வேண்டும், பிறகு அதனுள் பாதி அளவு தேனை சேர்த்து நன்கு கலந்து வெள்ளரி விதை கசகசா வை சேர்க்க வேண்டும். பின்பு இதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போதெல்லாம் சாப்பிடலாம்.

பெரியவர்கள் ஒரு ஸ்பூன் அளவும் சிறியவர்கள் பாதி ஸ்பூன் அளவு சாப்பிடலாம். இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன