நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of gooseberry

தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால் அது மூன்று ஆப்பிளுக்கு சமம் என்று நமது வீட்டிலிருக்கும் பாட்டி கூறி இருப்பார்கள். இதை நாம் கட்டுக்கதையாகவே கருதி வந்தோம், ஆனால் உண்மையில் நெல்லிக்காயில் அவ்வளவு சக்திகள் இருக்கின்றன. 

சிறு நெல்லிக்காயில் இவ்வளவு சக்திகள் 

இது பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் இதில் இவ்வளவு சக்தி இருக்காது என்ற எண்ணத்தில் நாம் இருந்திருப்போம். ஆனால் ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின்-சி சத்து இருக்கின்றது. இதை பச்சையாக சாப்பிடுவதால் நமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும். நெல்லிக்காயில் கால்சியம், புரோட்டீன் போன்ற சக்திகள் இருக்கின்றன. இதை ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள். 

மேலும் படிக்க – ஆண்களின் சிறுநீர் மிக சூடாக இருந்தால் என்ன நடக்கும்?

ஆரோக்கியமான உணவுகள் 

ஆரோக்கியமான உணவு என்று நம் வாங்கப்படும் பொருட்கள் அனைத்திலும் நெல்லிக்கனியை பயன்படுத்துகிறார்கள். இதைத்தவிர்த்து நம் தலைக்கு போடப்படும் எண்ணெய் போன்ற மூலிகை பொருட்களும் நெல்லிக்காயை கலக்கிறார்கள். இது நம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் நமது சருமம் மற்றும் தலைமுடியையும் ஆரோக்கியமாக வைக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறது.

குளிர்விக்கும் பழம் 

நமக்கு கிருமிகளால் உண்டாகும் வியாதிகளை இது வரவிடாமல் தடுக்கிறது. நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சியான ஒரு பழம் என்பதால் நாம் மிக எளிதில் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறோம் என்று நம்பி வருகிறோம். ஆனால் இது உண்மையில்லை நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நமக்கு ஏற்பட்டிருக்கும் ஜலதோஷ பிரச்சனையை இது தீர்த்துவைக்கும். இது நமது கண் மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு பழமாகும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் இருப்பதைவிட அதிகமாக வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கின்றது. 

மேலும் படிக்க – பசி எல்லைமீறி செல்லும்போது நமக்கு ஏன் குமட்டல் வருகிறது?

இதன் புளிப்பு சுவையினால் அதிகமான மக்கள் இதை தவிர்த்து விடுகிறார்கள். இதை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இது நமது எலும்பையும் உறுதிப்படுத்த உதவுகிறது. இதைத் தவிர்த்து நமது உடல் பருமனாவதைத் தவிர்க்கிறது. மற்றும் நமது உடம்பில் இருக்கும் சர்க்கரையை குறைக்கிறது. எனவே நெல்லிச்சாறு அல்லது நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் நமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன