ஒரு நெல்லிக்காயில் 10 ஆப்பிள் சக்தி இருக்கிறதா..!

  • by
health benefits of gooseberry

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்கு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக தேவைப்படுகிறது. எனவே நாம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிளுக்கு சமம் என்று நம் பாட்டி சொல்லி வளர்ந்திருப்பார்கள். ஏனென்றால் அத்தகைய சக்திகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நெல்லிக்காயில் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு நல்லது

வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச் சத்துக்கள் நெல்லிக்காய் மூலம் கிடைக்கிறது. எனவே கர்பமாக இருக்கும் பெண்கள் நெல்லிக்காயை போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும் பெற்றோர்களின் கவனத்திற்கு ……!

எலும்புகளை வலுப்படுத்தும்

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதினால் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு ஊன்று கோலாக இருக்கிறது.

ஆரஞ்சைவிட ஊட்டச்சத்துக்கள் உடையது

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி-யின் அளவு கிட்டத்தட்ட 20 ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் சத்துகள். அதேபோல்தான் நெல்லிக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் 10 ஆப்பிளுக்கு சமம் என்று சொல்வார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டது

நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் உடலுக்குள் எந்த ஒரு நோய்த்தொற்றுகள் அண்டாமல் பாதுகாக்கும். அதை தவிர்த்து புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவைகளை வரவிடாமல் தடுக்கும்.

நீரிழிவு நோயை குணப்படுத்தும்

நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து அதை சமமாக வைத்து கொள்கிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். அதை தவிர்த்து உங்களுக்கு எதிர்கால நீரிழிவு நோய் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு நெல்லிக்காய் சாப்பிடலாம்.

சளி ஜலதோஷம்

கிருமிகள் அதிக அளவில் உற்பத்தியாகும் போது, நாம் வெளியேற்றப்படும் கழிவுகளால் தான் நமக்கு ஜலதோஷம், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதை வரவிடாமல் தடுக்கும் பணியை நெல்லிக்காய் செய்கிறது. அதே போல் உங்கள் உடலில் இருக்கும் சோர்வை குறைத்து உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறது.

மேலும் படிக்க – சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

ஆண்மை சக்தியை அதிகரிக்கும்

நெல்லிக்காயில் இருக்கும் அதிகளவிலான சக்திகள் உங்கள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும். அதேபோல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்கும் என ஆண் பெண் இருவருக்கும் உதவும் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுங்கள்.

எனவே எல்லா சூழ்நிலையிலும் மிக மலிவாக கிடைக்கும் நெல்லிக்காயை வாங்கி பயன் பெறுங்கள், இல்லையெனில் கடைகளில் தேன் கலந்து விற்கப்படும் நெல்லிக்காயை வாங்கி சாப்பிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன