பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of ginger

நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பூண்டை கொண்டு எப்பேர்ப்பட்ட பேய்கள் மற்றும் காட்டேரிளை விரட்ட முடியும் என்ற பழமொழிகள் இருக்கின்றன. ஆனால் இங்கு பேய்கள் மற்றும் காட்டேரிகளை நமக்கு பிடித்திருக்கும் நோய்களை குறிப்பிடுகிறார்கள். எனவே பூண்டினை நமது உணவில் சேர்ப்பதன் மூலமாக நமது உணவின் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

பூண்டின் பண்புகள்

பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் ஆண்டிபயாடிக் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் இருக்கும் செலினியம் சக்திகள் நமக்கு ஏற்படும் புற்றுநோயை அழிக்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்சைட் அதிகமாக இருப்பதினால் நமது நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – புதினா இலை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சியுடன் வாழலாம்

உடல் எடையை குறைக்கும்

உடல் எடையை அதிகரிக்க கூடிய ஆணிவேரைக் கண்டறிந்து அதை ஆரம்பத்திலேயே தடுக்கிறது இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் என்றும் மெலிதாக இருக்கச் செய்யும். உடலில் கெட்ட கொழுப்புகளை உருவாவதை தடுத்து தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான ஒரு காரணம் சல்ஃபர்கள். எனவே பூண்டில் ஆர்கனிக் சல்ஃபர் இருப்பதனால் அதை உட்கொள்வதன் மூலமாக நமது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சமைக்கப்படாத அல்லது காயவைத்த பூண்டினை உன்பது மூலமாகதான் நமது உடலில் ஆர்கனிக் சல்ஃபர் அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்

நமது உடலின் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படக்கூடியதுதான் நீரிழிவு நோய். பூண்டினை எலிகளுக்கு தந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியால் உடலில் இருக்கும் குளுக்கோஸின் அளவையும், சர்க்கரை அளவையும் குறைந்துள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளார்கள். நமது உடலுக்கு தேவையான இன்சுலின் அளவையும்  அதிகரிக்கிறது. இதனால் தினமும் நாம் பச்சையாக பூண்டினை உன்பதினாள் நம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை இது குறைக்கிறது.

மேலும் படிக்க – கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

இருமல் மற்றும் சளி

வெள்ளைப் பூண்டில் நோய் தொற்றுகளை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளது. எனவே இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் வெள்ளைப் பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி போன்ற அனைத்தையும் நீரில் கொதிக்க வைத்து கசாயமாக குடித்தால் உடனடியாக இருமல் மற்றும் சளி விலகிவிடும்.

இருதய நோய் மற்றும் புற்றுநோய்

வெள்ளைப்பூண்டை பயன்படுத்துவதினால் இருதயத்தில் ஏற்படும் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்தவுடன் வெள்ளைப்பூண்டை பச்சையாக உண்டால் சிறப்பாக இருக்கும்.

சைனா அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்யப்பட்ட ஆய்வில் பூண்டு 33 சதவீதம் புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது, அதேபோல் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை 55 சதவீதம் குறைக்க உதவுகிறது. எனவே தினமும் உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலமாக நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மற்ற பிரச்சனைகளை தடுக்கும்

வயது அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நமது எலும்புகள் பலவீனமடையும், எனவே இவர்கள் பூண்டினை உட்கொள்வது சிறந்த மருந்தாகும். அதை தவிர்த்து கர்ப்பிணிப் பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதினால் அவர்களின் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மிகப்பெரிய பண்பை இது கொண்டுள்ளதது.

மேலும் படிக்க – கால் வலியை நிரந்தரமாக தீர்க்கும் வழிகள்..!

சரும பிரச்சனைகளை தீர்க்கும்

முகப்பருக்கள், சிரங்கு படர்தாமரை, கொப்பளங்கள், வரி தழும்புகள் மற்றும் இளமையில் முதிர்ச்சி தோற்றம் என எல்லாவற்றையும் பூண்டினை உட்கொள்வதினால் தடுக்க முடியும்.

கூந்தல் ஆரோக்கியம்

முடி மாசுபாட்டினால் அதிகமான உதிறும் மற்றும் பொடுகு தொல்லைகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்கு நாம் உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

எனவே உடலில் இருக்கும் ஏகப்பட்ட நன்மைகளுக்கு மிகவும் உதவும் பூண்டினை நாம் தினமும் அதிகாலையில் பச்சையாக சாப்பிடுவதினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதை தவிர்த்து உணவில் சேர்ப்பதன் மூலமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன