நல்லெண்ணையின் பயன்கள்..!

health benefits of gingely oil

சமையலுக்கு மிக முக்கியமானது எண்ணெய், இதன் மூலமாக தான் உங்கள் சமையல் ருசியாக இருக்கும். அதே சமயத்தில் நாம் அதிகளவில் எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் நமது உடல் ஆரோக்கிம் பாதிப்புக்குள்ளாகும். இதற்காக நாம் ஒரு சில எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும். இதில் முக்கிய பங்கு வகிப்பது நல்லெண்ணெய்.

நல்லெண்ணெயை நாம் எந்தளவிற்கு சமையலுக்கு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு ஆரோக்கிய பெறுகிறோமோ அந்த அளவிற்கு 6am அடைகிறோம் இதனால் நமது உடல்நலத்தை வலுப்படுத்த முடியும்.

நல்லெண்ணெயில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். நல்லெண்ணெயில் தாமிரம், கால்சியம், தாதுஉப்பு, மெக்னீசியம் போன்றவையும் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

நல்லெண்ணையை நம் உணவில் சேர்க்கும் போது அது நமது இதயத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறது. இதை தவிர்த்து இதய நோயை எதிர்த்து, ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கை வகிக்கிறது.

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் உடம்பில் இருக்கும் வெப்பம் அனைத்தும் வெளியேறும். இது மட்டுமல்லாமல் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரித்து, பொடுகுகளை போக்கும்.

அதேபோல் வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து குளிப்பதன் மூலம் உங்களின் நரம்புகளை வலுப்படுத்தும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினைகளால் கஷ்டப்படுபவர்களுக்கு தூக்கத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் மன நிம்மதியையும் அதிகப்படுத்தும்.

நாள் முழுவதும் கணினி முன் நின்று வேலை செய்பவர்கள் மற்றும் என்னேரமும் செல்போன்களைப் பயன்படுத்துவதால் கண்கள் மற்றும் உடலில் வறட்சி ஏற்படும். இதனால் உங்கள் பார்வை மங்குவதற்கு கூட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற சமயங்களில் நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிப்பதன் மூலம் அல்லது வெறுமனே நல்லெண்ணெயை தலையில் தேய்த்தால் உங்கள் பார்வை வலுப் பெறும், உங்கள் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

உடல் மெலிவாக இருப்பவர்கள் தினமும் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் அளவு குடித்து வந்தால் உடல் பூரிப்படையும். அதை தவிர்த்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் இதை சேர்த்து உண்டால் உடல் பளபளப்பாகவும், உடல் வலிமையும் அடையும்.

மேலும் படிக்க – கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

ஜோதிகா சொல்வதைப்போல் நல்லெண்ணெய்யைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் உடல் ஆரோக்கியமடையும். அதை தவிர்த்து சொத்தைப்பல் அனைத்தும் நீங்கி உங்களுக்கு பளபளவென பற்களை தரும். தயிராய்டு உள்ளவர்களுக்கும் இந்த ஆயில் புல்லிங் மூலமாக தைராய்டு ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு பிரச்சினையை நல்லெண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் குணப்படுத்தலாம். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட நல்லெண்ணெய்யை நாம் சமையலுக்கும் அல்லது உடலுக்கும் அதிக அளவில் பயன்படுத் தலாம். இதன் மூலம் நீங்கள் பல வருடம் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன