பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of following traditional habits

நம் முன்னோர்கள் நமக்கு ஏராளமான நன்மையை பயிற்சியாக அளித்துள்ளார்கள். ஆனால் நம்முடைய சௌகரியத்திற்காக அதை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம். தினமும் நாம் செய்யும் ஒரு சிறிய செயல் மூலமாக நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும் வகையில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதை நாமும் இன்று கடைப்பிடித்து நம்முடைய ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும்.

தரையில் அமர்ந்து உணவு அருந்துங்கள்

எல்லாவிதமான யோகா பயிற்சியும் நாம் தரையில் அமர்ந்துதான் செய்கிறோம். இதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் நாம் உணவு அருந்தும் போதும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது சிறந்த வழியாகும். இதை கடைப்பிடிப்பதன் மூலமாக உங்கள் உணவு மிக எளிதில் ஜீரணமாகி அதன் சக்தி உடல் முழுவதும் பரவும். எனவே நாம் டைனிங் டேபிள் போன்ற சௌகரியமான மேஜைகளில் அமர்ந்து உணவு அருந்தாமல் தரையில் அமர்வது நல்லது.

மேலும் படிக்க – பொது இடங்களில் எச்சில் துப்புவதினால் ஏற்படும் பிரச்சினைகள்..!

மண்பானைகளில் சமைப்பது

இன்றும் பல கிராமங்களில் சமையலுக்கு மண்பானை மற்றும் இயற்கை எரிவாயு தான் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற மண்பானைகளில் சமைப்பதன் மூலமாக நம் உணவுகளில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் உரிய படுகிறது. அதைத் தவிர்த்து நம் உணவுகளில் இருக்கும் சக்திகள் எதுவும் வெளியேராமல் நாம் ஆரோக்கியமான உணவை மண் பானையில் சமைத்து சாப்பிடலாம். இது அனைத்திற்கும் மேலாக மண்பானைகளில் சமைப்பதில் மூலமாக உங்கள் உணவு மிகவும் ருசியாக இருக்கும்.

சாப்பிடும் நேரம்

நம்முடைய முன்னோர்கள் எப்போதும் அதிகாலையில் எழுந்து ஆரோக்கியமான உணவுகளை அருந்தி வந்தார்கள். அதிலும் அவர்கள் நேரத்தை சரியாக கடைப்பிடித்து உடலுக்குத் தேவையான ஆற்றலை பெற்றார்கள். ஆனால் நாம் கண்ட நேரத்தில், கண்ட உணவுகளை உண்கிறோம். அதிலும் இரவு நேரங்களில் உறங்குவதற்கு முன்பு உணவு அருந்துகிறோம். ஒரு சிலர் நள்ளிரவில் உணவு அருந்துகிறார்கள். இது அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்யும். எனவே நீங்கள் இரவு 7 மணி அளவில் உணவு அருந்திவிட்டு குறைந்தது இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் இடைவெளி விட்டு உறங்குவது சிறந்தது.

கைகளில் உணவு அருந்த வேண்டும்

நாம் சாப்பிடும் உணவுகளை முடிந்தவரை கைகளில் சாப்பிட வேண்டும். இதன் மூலமாக நம்முடைய உணவு ருசியாகவும், நமக்குத் தேவையான அளவும் சென்றடையும். இதை இன்றும் பல பேர் பின்தொடர்கிறார்கள், இருந்தாலும் மேலைநாடுகளில் இந்த பழக்கங்கள் முழுமையாக அழிந்து விட்டது.

மேலும் படிக்க – உயிரியல் போரில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது..!

அமர்ந்து குடி நீரை அருந்த வேண்டும்

நீர் ஆகாரங்களை நாம் முடிந்தவரை அமர்ந்து கொண்டுதான் அருந்த வேண்டும். அதை நாம் நின்று கொண்டு குடிப்பதன் மூலமாக நம்முடைய எலும்புகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனால் முதுமையில் எலும்புகள் பலவீனமாகி பலவிதமான பாதிப்புகளை உண்டாக்கும். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி எல்லோரும் நமக்கு அறிவுறுத்துவது, எதை செய்தாலும் அதை அமர்ந்து பொறுமையாக செய்யவேண்டும் என்பதே.

எனவே இந்த பழங்கால பழக்க வழக்கங்களை இன்றும் கடைபிடிப்பவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். அதை தவிர்த்து சௌகரியத்திற்காக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அழித்து விடாதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன