ஆரோக்கியத்தில் ஆளிவிதையின் பங்கு!!!

  • by
health benefits of flax seeds

இப்பொழுது தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் ஒரு பெரும் தலைவலியாக இருக்கிறது. என்ன காரணத்தினால் முடி கொட்டுகிறது ஏன் முடி வறண்டு காணப்படுகிறது என்று கூட நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் முழுமையான பராமரிப்பின்மை ஆகும். 

ஆளி விதை

இந்த ஆளி விதையில் நார்ச்சத்து ஒமேகா-3, கொழுப்பு அமிலம், புரதச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. நமது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்க இந்த ஆளிவிதை நமக்கு பயன்படுகிறது. இந்த ஆளிவிதை பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு பிரச்சினையிலிருந்து கூட நம்மால் தப்பிக்க முடியும். 

மேலும் படிக்க – இஞ்சியை இப்படியெல்லாம் கூட சாப்பிடலாமா???

ஆளி விதை எண்ணெய்

இந்த ஆளி விதையில் இருந்து நீங்கள் எண்ணையை எடுத்து உங்கள் முடிக்கு மசாஜ் செய்து வந்தால் உங்கள் கூந்தல் ஆரோக்கியம் பெறும். உங்கள் தலைமுடி முழுவதும் இந்த ஆளி விதை எண்ணெயை தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஒரு 20 நிமிடம் கழித்து மிதமான நீரில் உங்கள் கூந்தலை அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்துவர உங்களது முடி கொட்டல் பிரச்சினை தீர்ந்து முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.

ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை

இந்த ஆளி விதைகள் தயாரிப்பதற்கு ஆளி விதை எண்ணெய் 1/4 கப், தண்ணீர் 2 கப், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆளிவிதை எண்ணெயையும், தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்தக் கரைசல் கெட்டியாகும் வரை மிதமான தீயில் நன்றாக சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். கடைசியாக அதனுடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இது ஒரு ஜெல் போன்ற பதத்துக்கு வந்தவுடன் இந்த ஜெல்லை ஆற வைத்து உங்கள் முடியில் தடவிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – கரோனா விடுமுறையில் குழந்தைகளை  எவ்வாறு வீட்டிற்குள்ளேயே வைத்து சமாளிப்பது???

சாப்பிடக்கூடாதவர்கள் 

ஆளி விதையை நன்றாக அரைத்து அந்த கரைசலை ஊற்றி தோசை மாவு சப்பாத்தி போன்றவற்றுடன் கலந்து செய்யும்பொழுது உணவு மென்மையாக இருக்கும். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆளி விதையை அறவே தொடக்கூடாது. ஏனென்றால் இது கருவை சிதைக்கக் கூடிய தன்மை கொண்டது. அதனால் தயவு செய்து கர்ப்ப காலங்களில் இந்த ஆளி விதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு இந்த ஆளிவிதை சேராமல் இருக்கலாம். அவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். அப்படி ஏதேனும் அறிகுறி இருந்தால் ஆளி விதையை சாப்பிட வேண்டாம். மேலும் ஏற்கனவே வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும் யாரும் இந்த ஆளி விதையை தவிர்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன