வெந்தயம் வைத்து பந்தயம் அழகு ஆரோக்கியம் கூட்டலாம்..

  • by

வெந்தயத்தை  உணவில் சரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம், அழகுக்கு வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

வெந்தயமானது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது அதிலுள்ள நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள்ள், நம்மை வலுவாக்கும். 

ஆரோக்கிய நண்பன்:

வெந்தயத்தில் இருக்கும்  சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகள் எலும்புகளுக்கும்,  ஹீமோ குளோபின் அளவை சீராக்கி கொடுக்கின்றது.

மேலும் படிக்க – தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.வெந்தய பேக்குகள் சருமத்தை பொலிவாக்கி இறந்த செல்களை நீக்குகின்றது.

வெந்தயத்திலிருந்து ஈதரை மூலம் வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது. மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.  வெந்தய எண்ணெய் உடல் பொலிவுக்கு உதவும். 

உடல் சூட்டை தணிக்கும்:

வெந்தயம் வைத்து

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. யுனானியிலும் இதன்மருத்துவ குணம் பயன்படுத்தபடுகின்றது. 

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். பெண்களின் கர்ப்ப காலத்தில் வெந்தயம் குறைவாக சாப்பிடலாம். 

வெந்தயம் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தய  பியூட்டி பேக்:

அழகு வெந்தயம்

வெந்தயம், பாசிப்பயிறு இரண்டையும் இரவு முழுவதும் ஊர வைத்து அடுத்த நாள் அரைத்து  அதனை பேக்காக தலைக்கு தடவி 1 மணி நேரம் கழித்து குளித்தால் அது தலையிலுள்ள அழுக்கை போக்குகின்றது.  சில்கியான நிலையில் கூந்தலை வைக்கும். 

முகத்தில்  வெந்தய பேக்கினை பயன்படுத்தி வருகையில்  ஸ்கின் கிளியராகும் உடலில் ஆரோக்கியம் பெரும்.  வற்ட்சி தன்மையானது சருமத்தை விட்டு போகும். 

மேலும் படிக்க – பருப்பு வகைகளில் இருக்கும் நன்மைகள்..!

சருமம் பிரைட்டா இருக்கும்.  

வெந்தய எண்ணெய் சருமத்தை  சீராக்கும் காயங்களை குணமாக்கும். 

வெந்தயக் கீரிமானது வைட்டமின் இ மாத்திரைகளுக்கு நிகரானது. வெந்தயத்தை ஊர வைத்து அதனுடன் சியா பட்டர் சேர்த்து பேக்காக பயன்படுத்தி தினமும் இரவில் கீரீமை பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன