எருக்கம்பூ எல்லோருக்கும் மருந்தாகவுள்ளது.

  • by

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் நாம் அலைந்து திரிந்து தெருவோரங்களில் பறித்து வரும் இறக்கம் பூக்களை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இறக்கம் பூக்களை தான் விநாயகருக்குப் பூஜைகள் செய்து படைப்போம், இத்தகைய சிறப்பு வாய்ந்த இறக்கம் பூவின் மருத்துவ குணங்களை நாம் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் நமது உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் சளி, ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சினைகளிருந்து நிரந்தரமாக தீர்வு காண முடியும்.

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

இறக்கம் செடியில் இரண்டு விதமான பூக்கள் பூக்கிறது. ஒன்று ஊதா நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதில் இந்த வெள்ளை நிற பூக்களின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சளி, இரைப்பு, இருமல், சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்தப் பூக்களின் மூலமாக நிவாரணம் பெறலாம்.

வெள்ளையாக இருக்கும் பூக்களை எடுத்து அதிலிருந்து நாரை மட்டும் அகற்றி விட்டு அதனை பொடியாக்க வேண்டும். பின்பு அதனுடன் மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து நிழலில் காய வைக்கவேண்டும்.

நாட்டு மருந்து கடைகளில் தாளிசப்பத்திரி என்று பொடி விற்கும், இதனை வாங்கிக் கொண்டு அதை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்தால் அது பாதியளவு ஆகும்வரை தண்ணீர் நன்கு சுண்ட வைக்க வேண்டும். பின்பு அதனுள் இந்த எருக்கம் பூ உருண்டையை போட்டு குடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்தும் இந்த மருந்து பாதுகாக்கும்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

சாதாரணமாக வீணாகும் என்று நாம் நினைத்த இந்த எருக்கம்பூ பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. எனவே இதைக் கொண்டு வீட்டில் இதுபோன்ற இயற்கை மருந்துகளை செய்து வைத்து அதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன