கரும்பு சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

  • by
health benefits of eating sugarcane

இயற்கை நமக்கு ஏற்றவாறு ஒவ்வொரு காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் பழங்கள், காய்கறிகளை நமக்கு தருகிறது. இதைத் தவிர்த்து ஏராளமான மூலிகைகளும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக காடுகளே உண்டாக்குகிறது. இதைக் கண்டறிந்த நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்களை ஏராளமான மனிதர்கள் செய்து வருகிறார்கள். அப்படி மனிதனால் கண்டறியப்பட்ட இயற்கை தந்த ஓர் அற்புதப் படைப்பு தான் கரும்பு.

சுவைமிக்க கரும்பு

சக்கரை உணவு என்றாலே நம் நினைவுக்கு வருவது கரும்புதான், ஏனென்றால் இதில் இருந்துதான் சர்க்கரையை உற்பத்தி செய்கிறார்கள். அத்தகைய இனிப்பை அள்ளித்தரும் கரும்பில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பொங்கல் திருநாள் வந்தாலே தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த கரும்பை மற்ற நாட்களில் கரும்புச்சாறாக அருந்து வருகிறார்கள். எனவே இதில் இருக்கும் பயன்கள் ஒவ்வொன்றாக இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

நச்சுக்களை வெளியேற்றும்

உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற கரும்பு உதவுகிறது. உங்கள் உடலைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

சிறுநீரக பாதுகாப்பு

சிறுநீரகத்தில் குழாய் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை இது சீராக்குகிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை கரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு அல்லது தேங்காய் தண்ணீரை ஒன்றாக கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதைப் பார்த்த சிறுநீரகம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது.

ஆற்றலை அதிகரிக்கும்

உங்களுக்கு உடனடி ஆற்றல் தேவை என்றால் ஒரு டம்ளர் கரும்பு சாறு அருந்துங்கள். எப்போதும் சோர்வுடன் இருப்பவர்களின் ஆற்றலை அதிகரிக்கும். கரும்பு சாறு அருந்துவதன் மூலம் அவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் வேலைகளை விரைவாக முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும்.

வாய் மற்றும் பற்கள் பாதுகாப்பு

கரும்புச் சாறில் உள்ள நீர் சத்து உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாக்கிறது. அதைத் தவிர்த்து பற்களில் ஏற்பட்ட சொத்தைகள் மற்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற அனைத்தையும் குணப்படுத்துகிறது. பலருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

நம் உடலுக்கு எல்லாமுமாக இருப்பது நமது மூளைதான், நாம் எதை செய்வதாக இருந்தாலும் அதை செய்யத் தூண்டுவது நமது மூளைதான். அத்தகைய மூளையின் செயல்பாடு அதிகரிக்க நாம் கரும்புச் சாறு அருந்தவேண்டும்.

இருதயத்தை பாதுகாக்கும்

கரும்பு நமது இருதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து நமக்கு ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வரவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – உடல் எடை குறைக்க எளிய வழிகள்

சரும பாதுகாப்பு

கருப்பை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து, உங்கள் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. அதை தவிர்த்து முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் சரும எரிச்சல்கள் அனைத்தையும் கரும்புடன், தயிர் கலந்து சாப்பிடுவதன் மூலமாக தீர்வு காண முடியும்.

எனவே கோடை காலங்களில் கரும்புச் சாறு அல்லது கரும்பை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதன் பலன்களை அறிந்து இதை ஒன்று முதல் இரண்டு வேளை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன