ஸ்ட்ராபெரி பழங்களில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!

  • by
health benefits of eating strawberry

நாம் கடைகளில் பார்க்கும் எல்லா இனிப்புகள் மற்றும் பொருட்களிலும் ஸ்ட்ராபெரியின் கலவை இருக்கிறது என்று விளம்பரங்கள் செய்யப்படுவார்கள். அப்பேர்பட்ட அற்புத சுவையை கொண்டதுதான் ஸ்ட்ராபெரி. இந்த பழத்தை அதிகமாக கோடை காலங்களில் நம்மால் பார்க்க முடியும். அதை தவிர்த்து அக்காலத்தில்தான் இதன் விலையும் மலிவாக கிடைக்கும். மற்ற சமயங்களில் இதை விலை கூடுதலாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சக்திகள்

ஸ்ட்ராபெர்ரியை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும், அதன் நறு மணமும், ருசியும் எல்லோரையும் ஈர்க்கும். அப்பேர்ப்பட்ட ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சக்திகள் என்னவென்றால் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இருக்கிறது. அதை தவிர்த்து போலிக் அமிலம், மெக்னீஷியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ், ஐயோடின், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, கால்சியம், தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், ஜிங்க் செலினியம் போன்ற ஏகப்பட்ட தனிமங்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க – ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

சிவப்பு நிறப் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தவிர்த்து சிவப்புநிற பழங்கள் எல்லாவற்றும் செல் அழிவை தடுக்கும். ஸ்ட்ராபெரியிடம் அத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளது.

இருதய ஆரோக்கியம்

ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும். இதனால் உங்கள் இரத்தத்தில் கொழுப்பு படியாமல் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

ஸ்ட்ராபெர்ரி உங்கள் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

பற்கள் ஆரோக்கியம்

ஸ்ட்ராபெரி பழச்சாறை தினமும் குடித்து வந்தால் உங்களின் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் பற்களில் இருக்கும் கரைகளை அகற்றி விடும். உங்கள் வாய் துர்நாற்றம் போக்கி உங்கள் புன்னகையை அழகாக்கும்.

செரிமானத்திற்கு உதவும்

ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதனால் உங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை என எல்லாவற்றையும் போக்கும். குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அகற்றி, குடல் இயக்கத்தை சீராக்கும்.

ஆண்மை சக்தி அதிகரிக்கும்

உஷ்ணத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி அவர்களின் ஆண்மை சக்தியை அதிகரிக்க ஸ்ட்ராபெரி உதவும். இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும் படிக்க – உடல் எடை குறைக்க எளிய வழிகள்

கூந்தல் மற்றும் சருமம்

தொலைக்காட்சியின் காட்டப்படும் என்ன விளம்பரங்களிலும் ஸ்ட்ராபெரி பழத்தை கூந்தலுக்கு பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் சருமத்திற்கு பயன்படும் கிரீம் என என்ன ஆற்றலும் பயன்படுத்துவார்கள். இதனால் கூந்தல் மற்றும் சருமம் இரண்டும் வலுவடையும்.

நீரிழிவு நோய்

சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் அரிசி மற்றும் கிழங்கு வகைகளை தவிர்த்து பழங்களை உண்ணுவது ஆரோக்கியமானது. அதிலும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை உண்ணுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சமநிலைப்படுத்துகிறது.

இதை தவிர்த்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்கிறது, உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது, கண் பார்வையை அதிகரிக்கிறது, என ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. எனவே இக்காலத்தில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வாங்கி பயன் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன