ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

  • by
health benefits of eating steamed food

நீங்கள் தினமும் காலையில் வேக வைத்த உணவான இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவைகளை சாப்பிட்டு வருகிறீர்களா.? ஆம் என்றால் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காலையில் நாம் எந்த அளவுக்கு வேக வைத்த உணவுகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. நாம் பசிக்காக எடுத்துக்கொள்ளும் காலை உணவை பலரும் மேற்கிந்திய வழிகளை பின்தொடர்ந்து வறுத்த உணவுகள் மற்றும் உடனடியாக செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தங்கள் ஆரோக்கியத்தை இழந்து வருகிறார்கள். எனவே இன்று முதல் இதை கைவிட்டு காலையில் முடிந்த வரை வேக வைத்த உணவுகளை சாப்பிடுங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கே காணலாம்.

புற்றுநோயை தடுக்கும்

நாம், நம் உணவை ஆவியாக சமைத்து சாப்பிடுவதன் மூலமாக குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதனால் உங்கள் உடலில் புற்றுநோய் பாதிப்பு  வராமல் பார்த்துக் கொள்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக இட்லி சாப்பிடுவதினால் அவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

மேலும் படிக்க – கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

உடல் எடை குறையும்

நாம் முடிந்தவரை காய்கறிகள், மாமிசங்கள் மற்றும் இதர உணவுகளை வேக வைத்து சாப்பிடுவது சிறந்ததாகும். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேராமல் உடல் எடையை குறைக்க முடியும். அதேபோல் இந்த உணவில் நீங்கள் எண்ணெய் சேர்க்காமல் தயாரிப்பதால் கொழுப்புகள் எதுவும் கலக்காமல் நீங்கள் பல வருடம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

அதேபோல் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதினால் உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரித்து இருதயப் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

செரிமானத்திற்கு நல்லது

நீங்கள் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் மற்ற காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதினால் அதில் இருக்கும் ஆரோக்கிய தன்மைகள் ஏதும் மாறாமல் உங்களுக்கு அப்படியே கிடைக்கிறது. அதைத் தவிர்த்து உங்கள் உணவுகள் மிக எளிதில் செரிமானம் செய்யவும் உதவுகிறது. எனவே வயிற்றுப்போக்கு, குடல் புண் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேக வைத்த உணவுகளை சாப்பிடுங்கள்.

ஆன்ட்டி ஆக்சைடு அதிகரிக்கும்

ஒரு சிலர் மாமிசம் என்றாலே அதை வறுத்து உண்ணுவதற்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் இதன் மூலம் அவர்களின் இதயம், உடல் உறுப்புகள் போன்ற அனைத்தும் விரைவில் பாதிப்படைகிறது. எனவே இதை தவிர்த்து இறால், மீன்கள் மற்றும் இறைச்சி போன்றவர்களை வேகவைத்து சாப்பிடுங்கள். அதேபோல் காளான், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை வேக வைத்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – பல நோய்களை தீர்க்கும் ஒரே இலை அது என்னவென்று தெரியுமா???

சிறுதானிய உணவுகள்

மற்ற உணவுகளை நாம் வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம் ஆனால் சிறுதானிய உணவுகளை நாம் வேக வைத்து மட்டுமே சாப்பிட முடியும். அனால் அத்தையே சிறு தானிய உணவை ஒரு சிலர் வேக வைத்து விட்டு அதை வறுத்து சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து சக்திகளும் இழுந்து சக்தி இல்லாத உணவுகளை உண்கிறீர்கள். எனவே எல்லா பருப்பு வகை உணவுகளையும் நாம் வேகவைத்து அதற்குத் தேவையான சுவையை அதிகரித்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் வலுவடையும்.

இனிமேலாவது எண்ணெயை பயன்படுத்தி வறுத்துச் சாப்பிடும் உணவுகளை குறைத்து, வேக வைத்த உணவுகளை அதிகமாக அருந்துங்கள். முடிந்தவரை ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வேகவைத்த உணவை சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன