காரட்டை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of eating raw carrot

இயற்கை நமக்கு ஏராளமான காய்கறிகளை வழங்கியுள்ளது. எனவே இதில் இருக்கும் சக்திகள் அனைத்தும் நமக்கு அப்படியே கிடைக்க வேண்டுமென்றால் அதை நாம் பச்சையாக சாப்பிடவேண்டும். ஆனால் எல்லா காய்கறிகளும் பச்சையாக சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல ஆனால் கேரட் மட்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காயாகும். எனவே இதைப் பச்சையாக சாப்பிடுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

கேரட்டில் இருக்கும் ஊட்டச்சத்து

கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ மற்றும் பைபர் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. இதைப் பச்சையாக சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கின்றது.

மேலும் படிக்க – சமுதாயத்தில் இருந்து விலகி இருப்பதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை எப்படி தடுக்க முடியும்..!

கண்களுக்கு சிறந்தது

கேரட்டை நாம் பச்சையாக சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ நம்முடைய கண் பார்வையை இரவிலும் தெளிவாக தெரிய உதவுகிறது. இதை அக்காலம் வாழ்ந்த முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

உடல் எடையை குறைக்கும்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுடன் கேரட்டை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக இதில் இருக்கும் பைபர் உங்கள் உணவுகளில் மிக எளிதில் ஜீரணமாக உதவுகிறது. இதை தவிர்த்து உங்கள் உடலை எப்போதும் மெலிதாக வைக்க உதவுகிறது.

மூல நோயை தடுக்கும்

கேரட் உங்கள் உடல் சூட்டை குறைக்கிறது. அதை தவிர்த்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை முழுமையாக குணப்படுத்தும் குணம் கேரட்டுக்கு உண்டு. எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

இருதயத்தை பாதுகாக்கும்

உங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிப்பதை  தடுத்து அதை ஆரோக்கியமாக வைக்கும் தன்மை இதற்கு உண்டு.

குறைந்த ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடவேண்டும். இதன் மூலமாக உங்கள் ரத்த அழுத்தம் குறைந்து உங்களை அமைதியாக வைத்துக் கொள்ளும். உயர் ரத்த அழுத்தம் உங்களுக்கு பக்கவாதம், இதய பிரச்சனை மற்றும் வலிகளை உருவாக்கும் எனவே இதைத் தடுப்பதற்கு கேரட்டை சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

நோய் எதிர்ப்பு சக்தி

கேரட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, உங்கள் உடலில் நோய்த்தொற்றுகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கு நீங்கள் தினமும் காலையில் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள். தலைவலி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற அனைத்தையும் வர விடாமல் தடுப்பதற்கு கேரக்டர் போதுமானது.

இதைத் தவிர்த்து உங்கள் சரும பிரச்சனை, சரும அழற்சி போன்றவைகளை தடுப்பதற்கு கேரட் உதவுகிறது. எனவே தினமும் காலையில் பச்சையாக ஒரு கேரட்டை நீங்களும், உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன