ராஜா போல வாழ்னுமா ராகி சாப்பிடுங்க..!

health benefits of eating ragi

ஆரோக்கியமான தானியங்களில் மிக முக்கியமான தானியமாக இருப்பது கேழ்வரகு. உலகம் வெப்பமயமாகி வரும் சூழலில் கூட கிராமப்புறங்களில் இன்னும் குளிர் நிலவி வருகிறது அதற்கு முழு காரணம் அவர்கள் செய்யும் விவசாயமும், அவர்கள் வளர்க்கும் மரம், செடிகளும் தான். இதை தவிர்த்து நகர்ப்புறங்களில் நோய் மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதுவே கிராமப்புறங்களில் வருடத்திற்கு ஒருவரோ அல்லது இருவரோ இயற்கை எய்கிறார்கல் அவர்களும் வயது முதிர்ச்சியால் காலமாகிறார்கள். இவர்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான காரணம் இவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுதான்.

உடல் ஆரோக்கியத்திற்கு ராகி

அக்காலத்து ராஜா, ராஜாவாக இருப்பதற்கான கம்பீரமும், வீரமும் அவர் எடுத்துக்கொள்ளும் உணவினால் தான் கிடைத்தது. ராஜாவைத் தவிர்த்து ஊர் மக்கள் அனைவரும் வலிமையாக இருப்பதற்கு காரணம் அவர்கள் அக்காலத்தில் செய்த விவசாய வழிகளும் உணவுக்காக உற்பத்தி செய்யும் தானியங்களும் தான். அதில் இன்றுவரை நமக்கு மிக உறுதுணையாக இருப்பது கேழ்வரகு. தினமும் காலையில் கேழ்வரகு கூழ் குடித்து வந்திருந்த நாம் இப்போது இட்லி, தோசை, பூரி என நமது உடல் நிலையை பாதிப்படைய செய்யும் காலை உணவுகளை அருந்தி வருகிறோம்.

மேலும் படிக்க – குங்குமாதி தைலத்தின் பயன்பாடுகள்..!

கேழ்வரகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு ஏற்படும் பல உடல் பிரச்சனைகளை இது தவிர்க்கிறது. தினமும் கேழ்வரகு கூழ் குடிப்பதன் மூலம் நம் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். அது மட்டும் அல்லாமல் கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை இது தவிர்க்கும்.

சத்துக்கள் நிறைந்துள்ள ராகி

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படும் இதை சரி செய்வதற்காக நாம் பெரிய செலவுகள் ஏதும் செய்யாமல் தினமும் கேழ்வரகு கூழ் குடித்து வந்தாலே போதும்.

மேலும் படிக்க – டிரெண்டாகும் வெல்லமும், பனை வெல்லத்தின் பயன்பாடு.!

கேழ்வரகு அடை மற்றும் புட்டு சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாகும். ஆனால் இவர்கள் கேழ்வரகு கூழ் மற்றும் கஞ்சியாக குடிக்கக்கூடாது. ஏனென்றால் இது உங்கள் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்துவிடும். கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதினால் இதை கூழாக உண்ணும் போது உங்கள் உடல் எடையை குறைத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை வரவிடாமல் தடுக்கிறது.

வெவ்வேறு விதமான காலை உணவுகள்

கேழ்வரகில் அதிக அளவில் நார்சத்து, இரும்பு சத்து, கால்ஷியம் இருப்பதினால் இது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாகும் அதுமட்டுமல்லாமல் ரத்த சோகை இருப்பவர்கள் கேழ்வரகை கூழாக அல்லது அடையாக சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ரத்த சோகை பிரச்சினை ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – சத்துக்களை தரும் மீன் எண்ணெய் அறிவோமா!

இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட கேழ்வரகை நாம் பல விதமாக சமைத்து சாப்பிடலாம். காலையில் கூழாகவும், அடையாகவும், கஞ்சி என நமக்குப் பிடித்த வகையில் இதை சமைத்து சாப்பிடலாம். இதில் எந்தத் தீங்கும் இல்லாததினால்தான் இதை பல இடங்களில் காலை உணவாக கேழ்வரகை தருகிறார்கள். எனவே இதன் ஆரோக்கியத்தை அறிந்து முடிந்தவரை வாரத்திற்கு ஒரு முறையாவது கேழ்வரகை பயன்படுத்தி உணவுகளை தயார் செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன