அவல், வேர்க்கடலை, சின்ன வெங்காய ஆரோக்கிய உணவு..!

  • by
health benefits of eating poha food

அவல், வேர்க்கடலை, சின்ன வெங்காயம் இவை மூன்றையும் வைத்து செய்யப்படும் உணவு தான் “போகா” அதாவது வட இந்தியர்கள் செய்யப்படும் உப்புமா. நாம் அவள்க்கு பதிலாக ஓட்ஸ் பயன்படுத்தி இந்த உப்புமாவை செய்யலாம். உப்மா என்றவுடன் ருசி இல்லாமல் நாம் வீட்டில் சமைக்கப்படும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ருசியாகவும் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் சமைக்கப்படும் உப்புமா.

போகா உணவு

நாம் சாப்பிடப்படும் அவுளை தண்ணீரில் ஊற வைத்து அல்லது அதை வேக வைத்து பிறகு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கடுகு, தக்காளி, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் போன்ற அனைத்தையும் போட்டு தயாரிக்கப்படுவதே இந்த போகா. இதை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதை காலை உணவாக சாப்பிடுவதன் மூலமாக உங்களின் ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகமாகும்.

மேலும் படிக்க – மண் பானைகளில் சமைப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கொழுப்பில்லா உணவு

இதில் சிறிய அளவு எண்ணெய் கலப்பது மட்டும்தான் கொழுப்புப் பொருள், மற்ற அனைத்துமே உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. உங்கள் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்க வேண்டுமென்றால் இந்த உணவை சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலமாக உங்களின் பசி உடனடியாக தீர்ந்து அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது.

உடல் எடையை சமமாகும்

உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உங்கள் உடல் எடையை சமமாக வைத்துக் கொள்ளவும், இது அனைத்திற்கும் மேலாக உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றி சுத்தமாக இருப்பதற்கும் இந்த காலை உணவு சிறந்தது.

சத்துக்கள் அடங்கியுள்ளது

இதில் நாம் கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு மற்றும் ஏராளமான காய்கறிகளை சேர்ப்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. இரும்புச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற அனைத்தும் இதில் கிடைப்பதனால் உங்களை வலுவாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

வேர்க்கடலை

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும், அவர்களின் மார்பகத்தில் இருக்கும் கட்டிகளை அகற்றுவதற்கும் வேர்கடளை ஒரு சிறந்த உணவு. இதில் போலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், இரும்பு சத்து, வைட்டமின்கள் அடைந்து உள்ளதால் இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

அதேபோல் சின்ன வெங்காயத்தில் ஏராளமான நோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன எனவே இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து காலை உணவாக சாப்பிடுவதினால் உங்கள் ஆரோக்கியம் அதிகரித்து எப்போதும் இளமையாக வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன