அன்னாச்சி பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

  • by
health benefits of eating pineapple

அண்ணாச்சி பழம் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் தான் அண்ணாச்சி பழம். இது எல்லா காலங்களிலும் கிடைத்தாலும் அண்ணாச்சி வளர்வதற்கான சரியான காலம் கோடை காலம். இது பார்ப்பதற்கு பூ போல இருந்தாலும் அதை சுற்றி முட்கள் நிறைந்து இருக்கும். அதை அகற்றி விட்டு உள்ளே இருக்கும் பழத்தில் இனிப்பு மற்றும் புளிப்பு என இருவகையான சுவையை தந்து எல்லோர் நாவிலும் எச்சில் ஊற வைக்கும். இப்படி இருவகையான சுவையைத் தரும் அண்ணாச்சி பழத்தில் இருக்கும் நன்மைகளை காணலாம்.

அண்ணாச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

அண்ணாச்சி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் வளமாக உள்ளது. எனவே இதை எல்லா சூழ்நிலையிலும், கர்ப்பிணி பெண்களைத் தவிர எல்லாரும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க – குழந்தைகள் விளையாடுவதற்காக ரிமோட்டை கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்??? உஷார்!

செரிமானத்திற்கு சிறந்தது

அண்ணாச்சி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி உங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் அண்ணாச்சி பழச்சாறை குடிப்பதினால் உங்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனை உடனடியாக குறையும். உங்கள் வயிற்றில் உண்டாகும் புழுக்களையும் அழித்து வெளியேற்றுகிறது.

நோய் தொற்றுகளை தடுக்கும்

அண்ணாச்சி பழத்தில் இருக்கும் சத்துக்களினால் உங்களுக்கு ஏற்படும் தொற்றை தடுக்கிறது. இதனால் ஜலதோஷம், இருமல் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் பிரச்சினைகள் ஏதும் உங்களை அண்டாது. அதேபோல் இதை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் சூடு அதிகரிக்கிறது. எனவே இது குளிர்காலத்திற்கு ஏற்ற பழமாகும்.

எலும்புகளை வலுப்படுத்தும்

ஒரு கப் அன்னாசிப் பழத்தில் 73% மங்குனிசி சத்து இருக்கிறது. எனவே இதைச் சாப்பிடுவதினால் உங்களில் மூட்டுகள், எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கும். அதேபோல் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும்.

கண்கள் ஆரோக்கியம்

சமீபத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான் பார்வைக்கோளாறு. இவர்கள் முழு நேரமும் கணினி அல்லது செல்போன் முன்னே அமர்ந்து இருப்பதினால் மிக விரைவில் இவர்களில் கண்கள் பாதிப்படைகிறது. இதை தடுப்பதற்கான சக்தி அன்னாசிக்கு உண்டு. அன்னாச்சி பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் பார்வை சக்தியை அதிகரிக்கிறது. அதேபோல் உங்கள் கண்களை பாதுகாக்கிறது.

இருதய பாதுகாப்பு

ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் டயாலிசிஸ் முறையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் எனவே இதுபோன்ற சிக்கலில் ஈடு படாமல் இருப்பதற்காக அண்ணாச்சி பழத்தை அதிகமாக உட்கொள்ளுங்கள். இதனால் உங்கள் இரத்த அழுத்தம் சீராகும், அதேபோல் அண்ணாச்சி சாப்டுவதினால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றுகிறது. இதனால் இதய பிரச்சனை ஏற்படாமல் உங்களை பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க – ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!

புற்றுநோய்க்கு எதிரானது

அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. அதைத்தொடர்ந்து மூச்சுக்குழாய் சீராக்கி நமது இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

பற்கள் ஆரோக்கியம், ஈறுகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் வீக்கம் போன்றவைகள் அனைத்தையும் குறைத்து நம்மை என்றும் ஆரோக்கியமாக வைக்க அண்ணாச்சி பழம் பெரிதாக உதவுகிறது. உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன