பசலை கீரையில் பலவித நன்மைகள் உண்டு..!

health benefits of eating pasalai keerai

கீரைகளில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கனிமச்சத்து என எல்லாமே இருக்கும் அதனால் நமக்கு ஏற்படும் பல பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். காய்கறி கடைகளில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மிக ஆரோக்கியமான உணவு கீரைதான். சாதாரணமாக 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விற்கப்படும் இந்த கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அதிலும் பசலைக் கீரையில் அதிகமாகவே உள்ளது.

மேலும் படிக்க – கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

கோடைக்காலங்களில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகள் அனைத்தையும் தீர்க்க உதவுவது கீரைகள் தான். அதிலும் பசலைக் கீரையில் ஏராளமான சக்திகள் உள்ளது. பசலைக்கீரையில் கொடிப்பசலை, குத்துப் பசலை, சிலோன் பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை என பல வகைகள் உள்ளது. இதில் குத்து பசலை தான் அதிகமாக கிடைக்கிறது. இதை சிறுபசலை, பசறை என பலவிதமான பெயர்களில் அழைப்பார்கள்.

பசலைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. எனவே இதை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமக்கு நோய் என்பதே ஏற்படாது. நமது உடலில் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இந்த குத்துப்பசலயின் பங்கு அதிகமாக இருக்கிறது. எனவே நம் உடம்பில் மேலிருக்கும் காயங்கள், கொப்புளங்கள் தீர்ப்பதற்கு இந்த பசலைக்கீரையை அரைத்து பத்து போட்டால் போதும் உடனே உங்களை சரியாகிவிடும்.

பசலைக் கீரை சிறுநீரக பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கும். மலச்சிக்கல், கால் மூட்டுகளில் ஏற்படும் வாதங்கள், சிறுநீரகக் கோளாறு இது அனைத்தும் வெள்ளைப் பசலை சாப்பிடுவதனால் நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

கொடிப்பசலை சாப்பிடுவதன் மூலம் நமக்கு உடல் வறட்சி, தாகம், உடல் சூடு போன்றவைகளை கட்டுப்படுத்தும். பசலைக் கீரையின் தண்டை கொதிக்க வைத்து அந்த நீரில் கற்கண்டு போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஏற்படும் சளியை குணப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கும். இது பெரியவர்களின் தாதுவை கெட்டிப்படுத்ததி ஆண், பெண் உறவுக்கு பக்கபலமாக இருக்கும்.

மேலும் படிக்க – விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

பசலைக்கீரையை பருப்புகளுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பசலைக் கீரை கண் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நீர்க்சுருக்கு, நீர்க்கட்டி, நீர்க்கடுப்பு மற்றும் ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு, புண்கள் என அனைத்தையும் நீக்குகிறது.

இந்த பசலைக்கீரையில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தினமும் காய்கறி வாங்கச் செல்லும்போது இந்த கீரை கட்டையும் ஒன்று வாங்கி மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை போக்க வீட்டில் சமைத்து உண்டு உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன