பப்பாளி மற்றும் கருஞ்சீரகம் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!

  • by
health benefits of eating papaya and black cumin seeds

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டுள்ள பப்பாளி மற்றும் கருஞ்சீரகத்தை நாம் சாப்பிடுவதன் மூலமாக நம் ஆரோக்கியத்தை பல மடங்கு அதிகரிக்க முடியும். உலகெங்கும் பல விதமான வைரஸ் கிருமிகள் தாக்கி வருகிறது. இதை தடுப்பதற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் மற்றும் கருஞ்சீரகத்தை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன.

பப்பாளி பழம்

பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதை தினமும் சிறிதளவு சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. அதே போல் உங்கள் உடல் எடையை குறைத்து உங்களை வலிமையாக மாற்றுகிறது.

மேலும் படிக்க – துளசி, மஞ்சள், கிராம்பு கொண்டு தயாரிக்கும் கசாயம்..!

மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலமாக அவர்கள் உடலில் இருக்கும் சர்க்கரை அளவு சமமாகும். கண்பார்வையை அதிகரிக்கும் ஆற்றல் பப்பாளிக்கு உள்ளது, எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி போன்ற அனைத்தையும் பப்பாளியைக் கொண்டு நாம் குணப்படுத்தலாம்.

மாதவிடாய் பிரச்சனை

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவை மிக எளிதில் ஜீரணமாக உதவும், அதைப்போல் மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும். அதிலும் அவர்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்க பப்பாளி உதவுகிறது.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நம்முடைய ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைத்து தேவையான இன்சுலினை சுரக்கச் செய்கிறது. இதன் மூலமாக உங்களுக்கு நீரிழிவு நோய் பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் படிக்க – அவல், வேர்க்கடலை, சின்ன வெங்காய ஆரோக்கிய உணவு..!

அறிவாற்றல் அதிகரிக்கும்

உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இதைத் தவிர்த்து உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்க கருஞ்சீரகம் உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை அகற்றி சுத்தப் படுத்தும் செயல் கருஜீரகம் செய்கிறது.

புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப த்தில் அழிக்கும் பண்பு கழகத்திற்கு உண்டு. எனவே கருஞ்சீரகம் மற்றும் பப்பாளியை தினமும் நாம் சாப்பிடுவதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன