பன்னீர் சாப்பிடுங்க பலமடைவீர்கள்..!

health benefits of eating panneer regulary

பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுதான் பன்னீர். கடந்த காலங்களில் இல்லாத உணவான பன்னீர் இக்காலத்தில் அதிகமாக பயன்படுத்தும் உணவாக மாறி உள்ளது. அசைவ உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு இணையாக எந்த உணவும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதற்கு இணையாக பன்னீர் உருவெடுத்திருக்கிறது. நாம் சிக்கன், மட்டன் போன்ற கறிகளை பயன்படுத்தும் உணவுகளில் பன்னீரை பயன்படுத்தி சைவ விரும்பிகள் ருசியாக சாப்பிட்டு வருகிறார்கள். இந்த பன்னீரில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த பதிவில் காணலாம்.

வலிமையான உடலுக்கு புரோட்டின் மிக முக்கியம், இது பன்னீரில் அதிகமாக கிடைக்கிறது. பொதுவாகவே அசைவ உணவுகளை உண்ணாதவர்களுக்கு புரோட்டீன் அளவு குறைவாகவே இருக்கும். ஆனால் இவர்கள் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதால் புரோட்டீன் சமநிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் பன்னீரில் புரோட்டீன் அளவு மிக அதிகம், எனவே இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் கட்டுக்கோப்பாகவும் அதைத் தவிர்த்து உங்கள் பசியை தீர்த்து மேலும் தேவையற்ற உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் செய்கிறது.

மேலும் படிக்க – சப்ஜா விதையின் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

தண்ணீரில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்புகளை வலுவாக்கிறது அதை தவிர்த்து உங்கள் பற்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதேபோல் பன்னீரில் இருக்கும் வைட்டமின் மற்றும் செலினியம் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் சரும பொலிவை அதிகரித்து மென்மையையும் தருகிறது.

பன்னீரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் இரும்பல், சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அதேபோல் ரத்தத்தில் இருக்கும் இமோகுளோபின் அளவையும் அதிகரித்து உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது.

ஆண்மை சக்தி அதிகரிக்க பன்னீர் உதவுகிறது. ஜிங்க் ஆனது உயிரியல் சக்தியை அதிகரிக்கும். பன்னீரில் ஜிங்க் அதிகமாக உள்ளதால் அதை நாம் உட்கொள்ளும் போது நம்முடைய விந்தணுக்களில் சக்தியை அதிகரிக்கிறது. தரம் குறைந்த விந்து, ஆண்மைகுறைவு, எண்ணிக்கைக் குறைவான விந்து என எல்லா பிரச்சினைகளையும் பன்னீர் போக்கிறது.

பன்னீர் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளுக்கான சிறந்த உணவாக இது இருக்கிறது.

இது அனைத்திற்கும் மேலாக பன்னீரினால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. பன்னீரில் அதிகமான கொழுப்பு இருப்பதினால் உங்கள் உடலில் கொழுப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்புகள் அதிகமாக உள்ளவர்கள் அல்லது மார்பக பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது இல்லையெனில் உங்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தும்.

மேலும் படிக்க – பர்ஃப்யூம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஒரு சிலருக்கு பால் உணவுகளினால் அலர்ஜிகள் ஏற்படும். இவர்கள் பன்னீரை தவிர்ப்பது நல்லது. அதே போல் தரமான பன்னீரை பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்படும். அதே சமயத்தில் பன்னீரின் ஆயுட்காலம் மிகக் குறைவு எனவே வாங்குவதற்கு முன் அதன் தேதியை பரிசோதித்து விட்டு வாங்குவது நல்லது.

பன்னீரில் சோடியம் இருப்பதினால் உங்களுக்கு ரத்த அழுத்தம், மனப் பதற்றம் மற்றும் இருதயத்திற்கு பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே பன்னீரை நாம் குறைந்த அளவில் மாதத்திற்கு ஒருமுறை உட்கொள்வது நல்லது. இதை அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை வீட்டில் உங்கள் கைப்பட தயாரிக்கும் பன்னீரை பயன்படுத்துவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன