இயற்கை உணவை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of eating organic food

ஆர்கானிக் உணவு என்றால் அது இயற்கை உணவு. எந்த ஒரு ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் செய்யப்படுவதால் இதை இயற்கை உணவு என்கிறார்கள். உலக மக்கள் தொகை அதிகமாக செல்வதினால் உணவு உற்பத்தி மிக விரைவில் செய்ய வேண்டும் என்பதற்காகவே செயற்கை முறையில் உணவுகளை தயாரிக்க தொடங்கினார்கள். ஆனால் இது பல பேரின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்தது. இதை தவிர்த்து இயற்கை உணவை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது, அதை இந்த பதிவில் காணலாம்.

ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன

இயற்கை உரங்களைக் கொண்டு செய்யப்படும் விவசாயங்கள் மற்றும் எந்த ஒரு மருந்துகளும் செலுத்தாமல் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளை ஆர்கானிக் என்பார்கள், அதாவது இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள். நம்மைச் சுற்றி இருக்கும் மரம், செடி அனைத்தும் தானாகவே நீர் மற்றும் சூரிய ஒளியைப் பெற்று இயற்கை முறையில் வளர்கிறது. ஆனால் மனிதனாகிய நாம் அது வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பலவித ஆன்டிபயாடிக் போன்ற ரசாயனங்களை அதற்கு அளித்து அதை விரைவில் வளரச் செய்து ஆரோக்கியமற்ற பொருளாக மாற்றி விடுகிறோம்.

மேலும் படிக்க – திரிபலா பொடியை பயன்படுத்தி ஏராளமான வியாதிகளை தடுக்கலாம்..!

விஷத்தன்மை இல்லா உணவு

ஒரு சிலர் தாங்கள் எந்த உணவை உண்டாலும் தங்கள் உடல் அந்த உணவை ஏற்றுக்கொள்ளாது. இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது அனைத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு, மலம் கழிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் நாம் ஆரோக்கியமாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுகளை உண்பது மூலமாக உங்களுக்கு எந்த ஒரு விளைவுகளும் இல்லாமல் நலமாக இருக்க முடியும்.

தாமதமான உற்பத்தி

இயற்கை வழியில் நாம் உணவை உற்பத்தி செய்தால் அந்த உணவு சற்று தாமதமாகவே உற்பத்தியாகிறது. ஆனால் எந்த ஒரு உணவு அதன் நேரத்தை சரியாகப் பயன்படுத்தி வளர்கிறதோ அந்த உணவுதான் நமக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் இருக்கும். இதை தவிர்த்து மிக விரைவில் உற்பத்தி செய்யும் உணவுகளில் விஷத்தன்மை இருக்க வாய்ப்பு உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு

ஆர்கானிக் வழியில் விவசாயம் செய்வதன் மூலமாக உங்கள் சுற்றுச்சூழலை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். நாம் விவசாயத்திற்காக ரசாயன பொருட்களை  நம் மண்ணில் கலக்கிறார்கள் இதனால் உங்கள் மண் மலட்டுத் தன்மை பெற்று ஒரு சில ஆண்டுகளில் உங்கள் உணவுகளில் இருக்கும் சக்தியை குறைத்து அதன் உற்பத்தியையும் குறைகிறது. எனவே உங்கள் மண்ணை மலடாக்காத உரங்களை போட்டு ஆரோக்கியமான வழியில் விவசாயத்தை செய்யுங்கள்.

மேலும் படிக்க – கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் முழுவதும் நீங்க பயன்படும் கருஞ்சீரகம்….

மாமிச உணவுகள்

ஆன்ட்டிபயாட்டிக் அதிக அளவில் சேர்க்கப்படும் மாமிச உணவு என்றாலே நமக்கு தெரிவது கோழிக்கறிதான். பொதுவாக ஒரு கோழி வளர்வதற்கு 2 முதல் 4 மாதங்கள்வரை எடுக்கும் ஆனால் இதுபோன்ற ஆன்டிபயாடிக் செலுத்தி ஒரு கோழியை வளர்க்கப்படுவதால் அது கிட்டத்தட்ட பத்து முதல் பதினைந்து நாட்களில் முழுமையாக வளர்ந்து விடுகிறது. மிக விரைவில் வளர்ப்பதினால் இதனுள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விஷத் தன்மை அதிகரிக்கிறது. எனவே நாம் இயற்கை யாக உற்பத்தியாகும் நாட்டுக் கோழி மற்றும் மீன் வகை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

குறைந்த நேரத்தில் அதிக லாபத்திற்காக இன்றும் ஏராளமானோர் உணவுகளை செயற்கை முறையில் தயாரித்து வருகிறார்கள். இதன் மூலமாக நமக்கு பலவித உடல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே நாம் இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் உணவை எடுத்து பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன