பாசிப்பயிறு முளைக்கட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்..!

health benefits of eating moong dal

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது பருப்பு உணவுகள், அதிலும் பாசிப்பருப்புபில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. பொதுவாக 100 கிராம் பாசிப்பருப்பில் நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. பாசிப்பருப்பில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் செலினியம் இருக்கிறது. இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர், பைபர் போன்ற ஏராளமான சக்திகள் அடங்கியுள்ளது. இரவு உறங்குவதற்கு முன்பு இந்த பருப்பை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்து அப்படியே சாப்பிட்டால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

பாசிப் பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் உதவி

பாசிப்பருப்பை உட்கொள்வதினால் நமக்கு ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைத்து நமது கூந்தல் மற்றும் சருமத்தின் பாதுகாப்பை அதிகரி க்கிறது. இதை நாம் அவ்வப்போது நமது உணவுகளிலும் சேர்த்து வந்தால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க – கற்றாழையில் கூந்தல் பாதுகாப்பு குறிப்புகள்.!

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் பாசிப்பருப்பை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவர்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் அகற்றி மிக விரைவில் அவர்களின் எடையை குறைத்துவிடும். உடல் வலிமையை பெறுவதற்காக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவர்கள் பாசிப்பருப்பை அதிகமாக உட்கொள்வார்கள்.

பாசிப் பருப்பின் பயன்கள்

பாசிப்பருப்பு உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் தருகிறது. இதை தவிர்த்து உங்களின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருகிறது.


மேலும் படிக்க – பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

உங்களுக்கு இரும்பு சத்து குறைபாடினால் ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் தினமும் பாசிப்பயிரை ஒரு கையளவு சாப்பிட்டு வாருங்கள். இது உங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பாசிப்பருப்பு

நீங்கள் அதிகமாக வெயிலில் சுற்றுபவர்களாக இருந்தால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதை தடுப்பதற்காக நீங்கள் பாசிப்பருப்பை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் முன்பு சொன்னதைப் போல் இரவில் ஊற வைத்த பாசிப்பருப்பை காலையில் சாப்பிட்டு வாருங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களை சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன