புதினாவை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of eating mint leaves in food

அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் மூலிகை பொருட்களாக பயன்படுத்தி வந்த கீரைகளில் புதினா கீரை ஒன்றாகும். இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அக்காலத்தில் புதினாவை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பயன்படுத்தினார்கள் பின்பு இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் தெரிந்து இன்று உலகம் முழுக்க இருக்கும் மக்கள் புதினாவை தங்கள் உணவுகளில் சேர்த்து பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டுள்ள புதினாவை உணவில் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

ஆஸ்துமா பிரச்சனை

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சரியான அளவு புதினாவை எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்கள் பிரச்சினைக்கு தீர்வை அளிக்கலாம். ஆஸ்துமாவினால் நுரையீரல் பெரிதாக பாதிப்படைகிறது, இதனால் மூச்சு விட சிரமம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது அனைத்தையும் தீர்க்கும் தன்மை புதினாவுக்கு உண்டு. புதினாவில் இயற்கையாகவே மெத்தனால் அதிகமாக உள்ளது, எனவே இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் சுவாச பிரச்சினை அனைத்தையும் தீர்க்கலாம். எனவே புதினா உங்கள் தொண்டை மற்றும் நுரையீரல்களில் இருக்கும் அடைப்புகளை அகற்றி உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – ஹாவர்ட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கணிப்பு..!

வயிற்றுப்போக்கு குணமாகும்

புதினா இலை உங்கள் பசி உணர்வை அதிகப்படுத்துகிறது, அதை தவிர்த்து உங்கள் உணவுகளை மிக எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது மற்றும் குடல்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் புதினாவில் செய்யப்பட்ட உணவை சாப்பிடவேண்டும். இதனால் வயிறு மற்றும் குடல்களின் அமிலங்களை சுரக்கச் செய்து வயிற்றின் பிரச்சினை உடனடியாக தீர்க்கிறது.

பாலூட்டும் தாய்மார்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக முக்கியமான ஒன்று, குறைந்தது இவர்கள் ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு தாய்ப்பால் குறைவாக வருவதினால் பெண்களின் காம்பை குழந்தைகள் கடித்து காயப்படுத்துகிறது. இதனால் ஏற்படும் வலி மற்றும் அவற்றை குறைப்பதற்கு இவர்கள் உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே இதன் மூலம் தாய்ப்பாலும் சுரந்து, பெண்களின் காம்பு மேலுள்ள காயத்தை விரைவில் குணப்படுத்தும்.

தோல் வியாதிகள்

புதினா இலையில் இருந்து தயாரிக்கப்படும் புதினா எண்ணெயை, நம் சருமத்தில் தேய்த்துபதன் மூலமாக நமக்கு ஏற்படும் அனைத்து விதமான தோல் வியாதிகளும் குணமாகிறது. அதேபோல் இதை முகத்தில் தேய்த்துபதன் மூலமாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் அனைத்து விதமான காயங்களையும் புதினா எண்ணெய் குணப்படுத்துகிறது. பூச்சிக் கடியால் ஏற்படும் காயங்கள் மற்றும் விஷத் தன்மையைக் குறைக்க புதினா எண்ணெய் பயன்படுகிறது.

மேலும் படிக்க – முக கவசத்தை வீட்டில் செய்வது எப்படி..!

உஷ்ணத்தை குறைக்கும்

கோடைக் காலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க புதினா பயன்படுகிறது. ஒரு சிலருக்கு வெயிலினால் ஜுரம் மற்றும் கட்டிகள் ஏற்படும். இதை புதினா இலையை சாப்பிடுவதன் மூலமாக குறைக்கலாம். இதைத் தவிர்த்து கோடை காலங்களில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளை புதினா இலை சாறை குடிப்பதன் மூலமாக குணமாகிறது.

புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் உடலில் ஏற்படும் நச்சுக்கலை குறைக்க புதினா பயன்படுகிறது. அதே போல் உங்கள் ஈறுகள் மற்றும் பற்களை உறுதியாக்கி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. எனவே இந்த சிறிய புதினா இலையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணத்தை சரியாக பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன