மாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of eating mangoes

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தின் ருசியை நாம் அறிவதற்கு கோடை காலம் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தக் காலங்களில் நம் மாம்பழத்தை சாப்பிடுவதினால் இதற்காக நம் காத்திருந்த காலம் நியாயமானது என்று தோன்றும் அத்தகைய ருசியை கொண்டதுதான் மாம்பழம். ஆனால் ருசி மட்டுமல்லாமல் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. அதில் நமக்கு கிடைக்கும் பயன்களை இந்த பதிவில் காணலாம்.

மலட்டுத் தன்மையைப் போக்கும்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சரிசமமாக பயன்களைத் தருகிறது மாம்பழம். மலட்டுத்தன்மை உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக அவர்கள் பிரச்சனை குணமடையும். திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைவதற்கு மாம்பழம் மிக அவசியம்.

மேலும் படிக்க – உங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..!

உடல் ஆற்றலை அதிகரிக்கும்

கோடை காலங்கள் வந்தாலே நம்முடைய உடல் மிக எளிதில் சோர்வடையும். அதை தடுப்பதற்கு இச்சமயங்களில் கிடைக்கப்படும் மாம்பழங்களை போதுமான அளவு சாப்பிடலாம். இதன் மூலமாக உங்களுக்கு தேவையான உடல் சக்திகளை அழித்து நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் பார்த்துக் கொள்ளும்.

வயிற்றின் நலம்

உங்கள் வயிற்றுப் பிரச்சினை அனைத்தும் போக்கும் சக்தி மாம்பழத்திற்கு உள்ளது. எனவே சாப்பிடும் உணவுகளில் மிக எளிதில் ஜீரணம் செய்வது முதல் வயிற்றுக்குள் இருக்கும் நோய்தொற்று கிருமிகள் போன்றவைகளை அழிக்க மாம்பழம் உதவுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்

நம் உடலில் ரத்தம் எல்லா இடத்திற்கும் செல்வதற்கு உதவியாக இருப்பது நம்முடைய நரம்புகள்தான். இதை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கு நாம் மாம்பழத்தை சாப்பிட வேண்டும். இது நினைக்கும் சக்திகளை உங்கள் நரம்புகளை வலுவடையச் செய்து இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

கண்கள் மற்றும் சருமம்

மாம்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கிறது. கண் பார்வை மங்குதல், கண்களில் புரை வளருதல் போன்ற அனைத்தையும் வரவிடாமல் தடுக்கும். அதேபோல் இதில் இருக்கும் பண்பு இளம்வயதில் சருமம் வறட்சியடைவதைத் தடுக்கிறது.

மூளையை சுறுசுறுப்பாக்கும்

மாம்பழத்தை உண்பதினால் உங்கள் மூளையை பலமடங்கு சக்தி உள்ளதாக மாறும். உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கும், உங்கள் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். இது உங்கள் மூளை செல்களை தூண்டி எல்லாவற்றின் மீதும் கவனத்தை செலுத்தும். இதைத் தவிர்த்து பசி எடுக்கும்போது மாம்பழத்தை சாப்பிட்டால் உங்கள் பசி அடங்கி மேலும் பல மணி நேரம் ஆற்றலுடன் வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க – பிரணயமா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

கர்ப்பப்பை பிரச்சனைகள்

பெண்களின் கர்ப்பப்பை சுத்திகரிக்கும் செயல்களை தான் மாதவிடாய் என்கிறார்கள். அவர்களுக்கு வலி மற்றும் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதை கட்டுக்குள் வைப்பதற்கும் மாம்பழத்தை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்கி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. எனவே கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்று மாம்பழத்தை ஒதுக்கி விடாமல் அதை சாப்பிட்ட உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன