கரிசலாங்கண்ணியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
health benefits of eating karisalankanni spinach

கரிசலாங்கண்ணிக் கீரையை நாம் படிப்படியாக அழித்து வருகிறோம், பல்லவர் காலத்தில் உங்களுக்கு கரிசலாங்கண்ணிக்கீரை வேண்டுமென்றால் நீங்கள் வரி செலுத்திவிட்டுதான் பறிக்க வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கரிசலாங்கண்ணியை நாம் இன்று வெகுவாக மறந்து வருகிறோம். இதை சிறிதளவு சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கீரையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்களை காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பருவக் கால மாற்றத்தினால் நமக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் கரிசலாங்கண்ணிக் கீரையை வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கி ஏலக்காய், மிளகுத்தூள் போன்றவைகளை நன்கு கொதிக்க வைத்து அதில் கரிசலங்கண்ணி பொடியையும் போட்டு தேநீராக குடிப்பதன் மூலமாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன..!

மஞ்சள் காமாலை குணப்படுத்தும்

உடல் சூடு அதிகமாவதால் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மஞ்சள்காமாலை பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாம் கரிசலங்கண்ணி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதன் மூலமாக உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கி உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும்.

ரத்த சோகை நீங்கும்

ரத்தத்தில் சுரக்கும் அமிலத்தன்மையை அதிகரிக்கும் அதைத் தவிர்த்து ரத்தத்தை சுத்திகரிக்கவும் கரிசலாங்கண்ணி உதவுகிறது. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் 100 கிராம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

கர்ப்பகால ரத்த போக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு சிலருக்கு ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக நீங்கள் சிறிதளவு கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் போதும். அதேபோல் குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்கு சளித் தொல்லை இருந்தால் கரிசலாங்கண்ணிச் சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து அவர்கள் வாயில் தடவினால் போதும், அவர்களின் சளி பிரச்சனை தீர்ந்து விடும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கு நாம் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

சுவாசப் பிரச்சனை

சுவாசப் பிரச்சனை அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் திப்பிலி சூரணம் சேர்த்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு நான்கு மாதம் இடைவெளி விட வேண்டும். பிறகு மீண்டும் சாப்பிட்டு வர வேண்டும், இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக ஆஸ்துமா நிரந்தரமாக குணமாகும். அதே போல் சிறுநீரக பிரச்சினையும் ஏற்படாது.

இதேபோல் கருமையான கூந்தல் வேண்டும் என்பவரும் மற்றும் பற்கள் உறுதியாகவும் பளபளப்பாக இருப்பதற்கு கரிசலாங்கண்ணிக்கீரை உதவுகிறது. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் உடலில் ஏற்படும் காயங்களை உடனே குணப்படுத்த கரிசலாங்கண்ணிக் கீரையை பற்றாக போடலாம். அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையை நம் வீட்டில் வளர்த்து அதன் பயனைப் பெற வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன