கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

  • by
health benefits of eating guava fruits

இயற்கை நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கியமான உணவை தந்திருக்கின்றன. ஆனால் நாம்தான் அதை சரியாக பயன்படுத்தாமல் அதை வீணடித்துக் கொண்டு வருகிறோம். மேலைநாடுகளில் ஆரோக்கியமான பழம் என்று அழைக்கப்படும் பழங்களை நாம் அதிக அளவில் வாங்கி உண்கிறோம். ஆனால் நமது நாட்டிலேயே அதிக அளவு உற்பத்தி ஆகும் பழங்களை மதிப்பதில்லை. இதுபோன்ற ஒரு பழம்தான் கொய்யாப்பழம். இது விலை மலிவில் கிடைக்கும் ஒரு பழம் என்பதால் இதன் மதிப்பு மிகவும் குறைவு. ஆனால் இதில் ஏகப்பட்ட ஆரோக்கியமான நற்குணங்கள் இருக்கின்றன.

சர்க்கரை அளவை குறைக்கும் கொய்யா

கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை வியாதி உருவாகாமல் தடுக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் இன்சுலினுக்கு நிகராக இந்த கொய்யா இருக்கிறது. கொய்யாப் பழத்தை விட கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் மூலம் இரண்டாம் வகையான நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உங்கள் இருதயத்தை பாதிக்கும் செல்களை அழிக்கிறது. அதைத் தவிர்த்து இருதய பாதிப்பை சரி செய்கிறது. கொய்யாவில் பொட்டாசியம் மற்றும் ஃபைபர் அதிகமாக இருப்பதினால் உங்கள் இருதய செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. கொய்யாப்பழம் உங்கள் ரத்தத்தில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றி இருதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கிறது.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவான வலிகளை கட்டுக்குள் கொண்டுவர கொய்யா பழம் உதவுகிறது. வயிற்று வலி, தொடை வலி போன்ற வலிகள் ஏதும் ஏற்படாமல் கொய்யா உதவுகிறது. மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கான ரத்தப்போக்கு அதிகரிக்கும் நிலையில் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்த போக்கை கட்டுக்குள் கொண்டுவரும்.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

உங்கள் செரிமான பிரச்சனையை தீர்த்து நீங்கள் அருந்தும் உணவு அனைத்தையும் செரிமானம் செய்ய உதவும். குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் என எதுவாக இருந்தாலும் கொய்யாவை சாப்பிடுவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும்

புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளுக்கு செய்யப்பட்ட ஆராய்ச்சியில் கொய்யாப்பழத்தை சாப்பிட்ட விலங்குகளுக்கு புற்றுநோய் செல்கள் பாதிப்பு குறைவாக தென்பட்டது. கொய்யா பழம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் எடை குறையும். உங்களுக்கு போதுமான அளவு நீர் சக்தி கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலமாக கிடைக்கிறது. அதைத் தவிர்த்து உங்கள் சரும அழகை அதிகரிக்கவும் கொய்யா பழம் உதவுகிறது.

கொய்யாவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கும் சூழ்நிலையில் இதை தினமும் வாங்கி அருந்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நமது எடையை சமநிலையில் வைப்பதற்கு இது உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவைகளை அதிகம் இருப்பதினால் போலிக் அமிலத்தை சுரக்க வைத்து நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கிறது. இதில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் நமக்கு செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் தொப்பையை குறைக்க இது உதவுகிறது. கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல் குணமடைகிறது. இது நமது கண், சருமம், உள் உறுப்புகள் அனைத்திற்கும் நன்மையை தருகிறது. எனவே அதிகளவு குளிர்ச்சி தரும் இந்த கொய்யாப்பழத்தை முடிந்த அளவு நாம் வாங்கி உண்பது நல்லது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன