திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

  • by
health benefits of eating grapes

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளின் பழங்களின் பங்கு அதிகமாக உள்ளது. அதிலும் திராட்சை உட்கொள்வதினால் நம் உடலுக்கு ஏகப்பட்ட பலனை அளிக்கிறது. திராட்சை கிட்டத்தட்ட மூன்று வகைகளாக நாம் சாப்பிட்டு வருகிறோம். முதல்வகை கருப்பு திராட்சை, இரண்டாம் வகை பச்சை திராட்சை, மூன்றாம் வகை உலர்ந்த திராட்சை ஆனால் இதை தவிர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராட்சை வகைகள் இருக்கின்றன. அதில் நாம் 15 வகை திராட்சைகளைதான் அதிகமாக பார்த்திருப்போம்.

உலர் திராட்சையின் நன்மைகள்

உலர் திராட்சைகள் நம்முடைய ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் தினமும் மூன்று உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை பிரச்சினைகள் இல்லாமல் சுறுசுறுப்புடன், ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் படிக்க – ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தேகம் ஆரோக்கியம் பெறும்..!

பச்சை திராட்சை

வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் பச்சை திராட்சையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இது உங்கள் இதயத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயை வரவிடாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க – ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..!

கருப்பு மற்றும் சிவப்பு திராட்சை

கருப்பு திராட்சையில் வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் உங்களின் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு ஏற்படும் பல நோய்களை இது தடுக்கிறது. திராட்சையில் மூன்று வகைகள் இருந்தாலும் அதில் கருப்பு திராட்சையே சிறந்தது. அதைத் தவிர்த்து இதன் சுவை மற்ற இரண்டு திராட்சைகளை விட அதிகமாக இருக்கும். இதனால்தான் இதில் பழச்சாறுகள் மற்றும் பானங்களை தயாரிக்கிறார்கள்.

தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது. அதில் முதலில், நமக்கு ஏற்படும் அல்சரை தவிர்க்கிறது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் அதிகரித்து நரம்பு செல்களின் இயக்கத்தை வலுப்படுத்துகிறது.

மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் புற்றுநோயின் செல்களை அழிக்கிறது. அதைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை வரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் உப்பசம், அஜீரணக்கோளாறு என எதுவாக இருந்தாலும் கருப்பு திராட்சை எளிதில் குணப்படுத்தும்.

மேலும் படிக்க – இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும்….. தீர்வுகளும்….!

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக கோளாறு போன்றவைகளை குணப்படுத்தும். அதிகமாக உழைப்பவர்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலியை இது உடனடியாக போக்கிவிடும். இதற்காக நீங்கள் தினமும் காலையில் கருப்பு திராட்சை பழச்சாறு அருந்தி வந்தால் போதும்.

ஆரோக்கியமான கூந்தல், இளமையான தோற்றம், மென்மையான சருமம், சமநிலையான நிறம் என அனைத்திற்க்கும் கருப்பு திராட்சை உதவுகிறது.

கருப்பு திராட்சையில் இனிப்பு சுவை இருந்தாலும் உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை இது குறைகிறது. அதேபோல் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை அகற்றி இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நமக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இந்த கருப்பு திராட்சையை உதவுகிறது. இதன் விலையும் மலிவாக எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்த கருப்பு திராட்சை வாங்கி தினமும் காலையில் சாப்பிடுங்கள், இல்லையெனில் காய்ந்த கருப்பு திராட்சைகளையும் வாங்கி பயன்பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன