ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..!

health benefits of eating dry arpicot

உலர் பழங்கள் எப்போதும் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அந்த வகையில் ஆப்ரிக்காட் பழத்தை நிழலில் காயவைத்து அதன் நீர் சக்திகள் வெளியேறிய பின்பு அருந்தப்படும் உலர் பழம் தான் இந்த ஆப்பிரிக்காட். இதில் ஏகப்பட்ட சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய குணங்கள் அடைந்துள்ளது, அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

ஆப்ரிக்காட் பழத்தில் இருக்கும் சத்துக்கள்

ஆப்ரிக்காட் பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்பு சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது இந்த ஆப்ரிகாட் பழம். இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே இந்த ஆப்ரிகாட் பழத்தின் மூலமாக நாம் என்னவெல்லாம் நன்மைகளை பெறலாம் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

ரத்த சோகைக்கான தீர்வு

மாதவிடாய் சமயங்களில் ஒரு சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகளவில் இருக்கும். இதை கட்டுக்குள் கொண்டுவர உதவுவது இந்த ஆப்ரிகாட் பழம். அதேபோல் ரத்தத்திற்கு தேவையான இரும்பு சத்துக்களை ஆப்ரிகாட் பழம் அதிகமாக கொண்டுள்ளதால் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற பழமாகும்.

செரிமானம் மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்

செரிமான சக்தியை அதிகரிக்கும் அமிலங்களைக் கொண்டுள்ளது இந்த ஆப்ரிகாட் பழம் எனவே இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.

அதேபோல் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவது நல்லது. இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸ் நிறைந்து இருப்பதினால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கிறது.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

காய்ச்சலைப் போக்கும்

ஆப்ரிக்காட் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் குணமாகும். உங்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி தேவையற்ற கிருமிகளை அழித்துவிடும், எனவே உடல் சோர்வு என்பது உங்களுக்கு ஏற்படாமல் காய்ச்சலைக் குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சிசுவிற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஆப்ரிக்காட்

ஆப்ரிகாட் பழங்கள் நீண்டகாலமாகவே கர்ப்பகால சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகிறார்கள், இதை மூலிகையாக பயன்படுத்தி கர்ப்பிணி பெண்களுக்கு தருகிறார்கள். இதை தவிர்த்து குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அதேபோல் ரத்தக்கசிவு, வலிப்பு நோய் போன்ற அனைத்தையும் குணமாக்கும். ஆப்ரிக்காட் பழத்தை தாய் சாப்பிடுவதன் மூலமாக வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அது குடிக்கும் பால்களின் மூலமாக தரும்.

மேலும் படிக்க – பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

ரத்தம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது

உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.ம். உங்கள் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் ரத்த சோகை பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

சருமம் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை

காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்பு சளி போன்றவைகள் இருக்கும் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே ஆப்ரிக்காட் பழங்களை வாங்கி உட்கொள்ளுங்கள். இது உங்களுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும். ஆப்ரிக்காட் பழங்களை நீரில் போட்டு ஊறவைத்து அந்த சாரை கொண்டு உங்கள் சருமம் முழுக்க தேய்த்து வந்தால் சருமத்தில் இருக்கும் சொரி, சிரங்கு, வறட்சித் தன்மை என எல்லாவற்றையும் போக்கி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

எனவே இதில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து அதற்கேற்ப ஆப்ரிக்காட் பழங்களை வாங்கி பயன் பெறுங்கள். இதன் விலை மற்ற உலர் பழங்களின் விலை போன்றுதான் இருக்கிறது. எனவே மொத்தமாக வாங்கிக்கொண்டு உங்கள் உணவில் அவ்வப்போது சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன