சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

  • by
health benefits of eating custard apple

பழங்கள் என்றாலே உடலுக்கு அதிகம் நன்மை செய்யக் கூடியதாகவே இருக்கிறது. அதிலும் சீதாப்பழம் மற்ற பழங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சுவை மட்டுமல்ல அவை அளிக்கும் சத்துக்களும் மற்றவை களிலிருந்து வேறுபட்டு தான் இருக்கிறது. இதில் உள்ள வேதிப்பொருள் மன அழுத்தத்தை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

சீத்தாப்பழத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள் 

நாம் சீதாப்பழம் என அழைக்கும் இதை ஆங்கிலத்தில் கஸ்டட் ஆப்பிள் என்று அழைக்கின்றனர். கஸ்டட் என்றால் க்ரீம் என்றும் பொருள். அதாவது  ஐஸ்கிரீமில் இருப்பதுபோலவே சுவை இந்த சீதாப்பழத்தில் இருப்பதால்தான் இதற்கு இப்பெயர் வந்தது. வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இப்பழத்தில் மேலும் தாதுஉப்புக்கள், உடலுக்கு ஆற்றல் தரும் இனிப்புகள், கொழுப்பு சத்துக்கள், நார்ச் சத்துக்களும் இதில் அதிக அளவு காணப்படுகின்றன. 

சீதாப்பழத்தால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்

இப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில் தான் மரத்தில் காய்க்கிறது. உயரம் குறைவாக உள்ள சீதாப்பழம் மரத்தின் முற்றிய கிளைகளில் காய்கள் காய்க்கின்றன. ஐஸ்கிரீமின் சுவை பெற்றிருப்பதால் குழந்தைகளும் இதை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். சில குழந்தைகளுக்கு பால் குடிப்பது பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கும் அப்படி இருக்கும் குழந்தைகள் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டால் போதும் பாலில் இருக்கும் அளவிற்கு கால்சியத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க – ரோஜா எண்ணெய் பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சீதாப்பழம் 

மனித உடலில் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் இருக்கின்றன. நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உடலுக்கு ஆற்றல் தேவை. அதாவது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஆன்டி- ஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத் தருவது வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்கள் தான். இவை சீதாப்பழத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளன.

நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. காரணம் நாம் சமைக்கும் போது காய்கறிகளின் தன்மை மாறி விடுவதால் அதில் முழு வைட்டமின்களும் நம் உடலை வந்த அடைவதில்லை. ஆனால் பழங்களில் இவை நேரடியாக நம் உடலுக்கு செல்வதால் வைட்டமின்கள் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.

உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும்போது வைட்டமின் சி சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. இன்று பரவி வரும் பல்வேறு வகையான தொற்று நோய் கூட்டங்களுக்கு நம் உடலினுள் செல்லாமல் இருக்க ஒரு காவலனாக நிற்பது வைட்டமின் சி தான். அதாவது இன்ஸ்பெக்சன் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த வைட்டமின் சி அதிக அளவில் பயன்படுகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளியேறும் பொழுது அவர்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது இந்த வைட்டமின் சி செறிந்த சீதா பழம் சீதாப்பழம். ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி தலைசுற்றல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

தினமும் இரவில் தூங்குவதற்கு கஷ்டப்படுகிறீர்களா? 

மாத்திரைகள் உண்பதை விட்டுவிட்டு தினம் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டு பாருங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.

சீதாப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம்

இப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான மக்னீசியம் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. மற்றும் கால்சியம் மூட்டில் சுரக்கும் தேவையில்லாத அமிலங்களின் அளவை குறைக்கிறது. இதனால் எலும்புகள் பலப்படும் படுவதோடு ஆர்த்தரடீஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

சீத்தாப்பழத்தில் உள்ள காப்பர் மற்றும் நார்ச்சத்து 

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் உடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதையும் சரி செய்கிறது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. சீதாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இவை உடலில் அதிக அளவு இருக்கும் சர்க்கரையை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – மிளகு ரசம் கரோனாவை கொள்ளுமா..!

சீதா பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ

இப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கின்றது. இதனால் உடல் வறட்சி ஏற்படும் ஏற்படாமல் தோல் பளபளப்பாகவும் சருமத்தை பாதுகாக்கவும் இப்பழம் பயன்படுகிறது. 

சீதாப்பழம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சீத்தாப்பழம் கருவுற்றிருக்கும் பெண்கள் அதிகளவு பழங்களை உண்பதால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது என்பது  அனைவரும் அறிந்ததே! சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை வளர்ச்சியை சரி செய்வதால் குழந்தை மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது.

சீதாப்பழத்தில் இருக்கும் விட்டமின் பி6

ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது. மூச்சுக்குழலில் அலர்ஜி ஏற்படாமல் இருக்கவும் சீதாப்பழம் பெரிதும் உதவுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன