தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

  • by
health benefits of eating curd rice

தென்னிந்தியர்கள் அதிகம் உணவுகளில் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தயிர். தாங்கள் மிகப்பெரிய விருந்தை உட்கொண்டால் இறுதியில் ரசம் அல்லது மோர் சாதம் சாப்பிடுவார்கள். ஆனால் இதற்கு முன்பாக சிறிது தயிர் சாதம் சாப்பிட்டு தங்கள் உணவை முழுமை அடைய செய்வார்கள். அதிக ருசியான உணவுகளை உண்டால் உடல் கோளாறுகளை உண்டாக்கும் என்று சொல்லும் மருத்துவர்களே தயிர் சாதத்தை உன்னல்லாம் என்கிறார்கள்.

ப்ரோபயாடிக் உணவுகள்

நம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இரு வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அதில் நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலின் சக்தியை அதிகரித்து நமது செரிமானத்தை சீராக வைத்துக்கொள்கிறது. அதுவே கெட்ட பாக்டீரியாக்கள் நம் உடலில் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

தயிர் மற்றும் இட்லி மாவில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. சாதாரண பாலில் சிறிது ஒரம் ஊற்றிய பிறகு மறுநாள் அந்த பாக்டீரியாக்கள் மூலமாக பால் தயிராக மாறுகிறது. அதேபோல்தான் புளிப்புத் தன்மையை அடைந்தவுடன்தான் அரிசி மாவு இட்டிலிக்கு உகந்ததாக இருக்கும். எனவே இதற்கு உதவுவது இந்த வகை பாக்டீரியாக்களே.

மேலும் படிக்க – கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

தயிர் சாதம் தரும் நன்மைகள்

முதியவர்கள் மற்றும் மூதாட்டிகள் தினமும் தயிர் சாதத்தை மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மருத்துவ குணங்களை அறிந்த அவர்கள் எப்போதும் தங்கள் உணவில் தயிர் சாதம் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். அப்படி தயிர் சாதம் சாப்பிடுவதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்

தினமும் நம் உணவில் தயிர் சாதத்தை சேர்ப்பதன் மூலமாக நமக்கு ஏற்படும் அனைத்து வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அஜீரணக் கோளாறை சரி செய்யும். ஒரு சிலர் தங்கள் உணவில் அதிகமான மசாலாக்களை சேர்த்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் வயிற்று பகுதியில் அசவுகரியம் ஏற்படும். இவர்கள் உணவு சாப்பிட்டு முடிக்கும் போது சிறிதளவு தயிர் கலந்த சாதத்தை சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க – காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சிறந்த உணவுகள்..!

ஆண்மைக்கு உகந்த சாதம்

தயிர் சாதம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆண்மை சக்தி அதிகரிக்கும். இதிலிருக்கும் பாக்டீரியாக்கள் நமது ஆற்றலை அதிகரிக்கும். தயிர் சாதம் தயிர் சாதம் உங்கள் இரத்த அழுத்தத்தை சமமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதேபோல் வயிற்றில் ஏற்படும் நோய்கள் குடலில் புண்கள் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது .

உடல் எடையை குறைக்கும்

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தயிர் சாதம். ஒரு சிலர் இது பாலில் இருந்து வருவதினால் இதிலும் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்று எண்ணி உணவுகளில் தவிர்ப்பார்கள், ஆனால் இதில் இருக்கும் அனைத்துமே நல்ல கொழுப்பு என்பதால் இது உங்கள் உடல் எடையை அதிகரிக்காது.

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற உணவு அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ப்ரோபயாடிக் உணவுகள் புற்றுநோயை தடுக்கும் என்று நிரூபணமாகியுள்ளது.

மேலும் படிக்க – உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

எனவே இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட தயிர் சாதத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன