தினமும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

  • by
health benefits of beetroot

பீட்ரூட் பார்ப்பதற்கு சிகப்பாக இருக்கும், இதன் நிறத்திற்கு ஏற்றாற் போல் நம் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க இந்த பீட்ரூட் உதவுகிறது. அதை தவிர்த்து நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முழு ஆற்றலையும் இந்த பீட்ரூட் தருகிறது. உங்கள் உடலில் ஸ்டாமினாவை அதிகரிக்க தினமும் பீட்ரூட் பழச்சாறை அருந்தி வந்தால் போதும். இதன் மூலமாக நீங்கள் விரைவில் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

உடலை சுத்தப்படுத்தும்

உங்களுக்கு அடிக்கடி ஏதாவது ஒரு உடல் பிரச்சனை வருகிறதா, அப்படி என்றால் உங்கள் உடலில் நச்சுத் தன்மை அதிகமாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு தினமும் பீட்ரூடை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

மேலும் படிக்க – உடல் எடையை குறைக்கும் உணவுகள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

பீட்ரூட் பழச் சாறை தினமும் அருந்தி வந்தால் உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைத்து உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மருந்து மாத்திரைகளின் பின்னால் செல்லாமல் இப்போதிலிருந்து தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் பழச்சாறு அருந்துங்கள்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்

இந்தியா மக்கள், வருடத்திற்கு அதிகளவில் பாதிக்கப்படும் நோய்களில் புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதற்கு காரணம் நம்முடைய உணவு முறைகள்தான். எனவே தினமும் நாம் பீட்ரூடை உணவில் சேர்ப்பதன் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. அதேபோல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் பீட்ரூட் கொண்டுள்ளது.

கல்லீரல் பாதிப்பை சரி செய்யும்

பீட்ரூட்டில் இருக்கும் வேதிப்பொருள் கல்லீரலுக்கு மிகவும் நன்மையை அளிக்கும். இது கல்லீரலில் பாதிக்கப்பட்ட செல்களை புதுபிக்கும். இதனால் பீட்ரூட்டை உணவில் அல்லது பழச்சாறாக அருந்தும்போது உங்கள் கல்லீரல் சுத்தம் அடைந்து ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க – இயற்கையாக நம் உடல் எடையை குறைக்கும் வழிகள்

இரும்புச்சத்து அதிகமாக உள்ளது

உடலில் உள்ள இரத்த அணுக்களை பீட்ரூட் சீராக்க உதவுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் உங்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் உங்களுக்கு ரத்த சோகை பிரச்சினை வராமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மூளையின் ஆரோக்கியம்

பீட்ரூட் சாப்பிடுவதினால் உங்கள் மூளையில் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை போக்கும். இது உங்கள் மூளையில் இருக்கும் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் ஞாபக சக்தியை வலுவாக்கும்.

இதைத் தவிர்த்து ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே இதை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் இதை தினமும் காலையில் பழச்சாறு அருந்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன