வளமாக வாழ வேண்டுமா? அப்போ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.!

  • by
health benefits of eating banana in summer season

கோடைக்காலம் வந்துவிட்டது கொளுத்தும் வெயிலை சமாளிக்க நாம் அதிகம் நாடுவது பழங்களை தான். நாம் தேடித்தேடி உண்ணும் பழங்களில் எல்லாம் கனிமங்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உயிர்ச்சத்துக்கள் என இவை அனைத்தும் நிறைந்த இருக்கிறதா என்று  கேட்டால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக தான் உள்ளது.

” தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது” என்று ஒரு வெளிநாட்டு பழமொழி இருக்கிறது. ஆனால் ஆப்பிளை மிஞ்சும் ஊட்டச்சத்துக்கள் நம் சிவப்பு கொய்யாவில் இருப்பதைப் பற்றி எந்த பழமொழியும் இதுவரை வரவில்லையே?என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமே!

ஆப்பிள் சத்துள்ள பழம்தான் ஆனால் அதை விடவும் பல மடங்கு சத்துள்ள பழங்கள் நம்முடைய நாட்டு பழங்கள்  இருக்கின்றன.

இதைவிட மிக முக்கிய ஒரு காரணம் “நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ அந்த மண்ணில் விளையும் காய் கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த ” பலன்களைத் தருபவை  என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க – உங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..!

தங்கம் நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே போகிறது. அது போலதான் ஆப்பிளும் தற்போது ஒரு கிலோ ஆப்பிளின் விலை ரூபாய் 200. ஆனால் அதிலுள்ள சத்துக்களைக் காட்டிலும் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நம் நாட்டு பாரம்பரிய பழங்கள் விலையில் குறைவாகவும்  அதன் ஊட்டச்சத்துக்களில் அதிகமாகவும் இருக்கதான் செய்கின்றன. அதில் முக்கியமான வாழை பழத்தை பற்றி பார்க்கலாம்.

வாழைப்பழம் 

வாழைப்பழம் சாப்பிட மாட்டேன் நான் டயட்டில் இருக்கிறேன். வெயிட் போட்டுவிடும் என்று கூறும் பலருக்கு  ஒரு இனிப்பான செய்தி.

நாம் உண்ணும் சின்ன வாழைப் பழம் வெறும் 60- 80 கலோரிகள் தான் தரும். ஆனால் அது கூடவே எலும்புக்கு தேவையான கால்சியம், இதயத்துக்கு தேவையான பொட்டாசியம், மலமிளக்கியாக பயன்படும் நார்சத்து, மனதை சந்தோஷப்படுத்தும் ஹார்மோனை சுரக்க உடனடியாக உடலுக்கு ஆற்றல் தரும் குளுக்கோஸ் தரும் ஹை கிளைசிமிக் என பல விஷயங்களை தன்னுள் வைத்திருக்கிறது. வாழையின் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. 

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு 

ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் 1.கார்போஹைட்ரேட்டின் அளவு 27.2 கிராம்புரதம் 1.2 கிராம் 
3.நார்ச்சத்து 4கிராம் 
4.வைட்டமின் சி 7 மில்லி கிராம்
5.கரோட்டின் 78 மைக்ரோகிராம் 
6.இரும்பு 1.3 மில்லி கிராம் 
7.பொட்டாசியம் 88 மில்லி கிராம்,கால்சியம் 17 மில்லி கிராம்

இவை அனைத்தையும் நாம் அதிகமாக விரும்பி உண்ணும் ஆப்பிள் ஒப்பிட்டுப பார்த்தால் வாழைப்பழம் சற்று உயர்வாக தான் இருக்கிறது அனைத்து சத்துக்களும் வாழைப்பழத்தில்.

மேலும் படிக்க – பிரணயமா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

வாழைப்பழத்தின் வகைகள்

வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. நாட்டு வாழைப்பழம், நேந்திரன் வாழைப்பழம், கூழாஞ்செண்டு வாழைப்பழம், செவ்வாழை, மலைவாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், கற்பூரவள்ளி, பூவன் பழம்.

வாழையின் எந்தெந்த பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? 

வாழையின் ஒவ்வொரு ரகத்திலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது, தாய்ப்பாலுக்கு அடுத்து திட உணவுக்குத் திரும்பும் பச்சிளம் குழந்தைக்கு மலை வாழைப்பழம் சிறந்ததாக இருக்கும்.

நார்சத்து அதிகம் தேவைப்படும் நடுத்தர வயதினருக்கு திருநெல்வேலி நாட்டுப்பழம் சிறந்ததாக இருக்கும்.

மெலிந்து நோஞ்சானாக உள்ள குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமானால் நேந்திரன் வாழைப்பழம் சிறந்ததாக இருக்கும்.

மூட்டு பிரச்சனை குதிகால் வலிக்கிறது என்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்ததாக இருக்கும்.

மொந்தன் வாழைப்பழம் என்றால் என்ன?

காய்கறி கடைகளில் நாம் வறுக்க வாங்கும் பெரிய வாழைக்காயை பழுக்க வைத்து சாப்பிட்டால் அதன் பெயர்தான் தான் மொந்தன். அது தரும் குளுமைக்கு ஈடு இணையே இல்லை. தினமும் ஒரு மொந்தன் பழத்தைக் கனிய விட்டு சாப்பிட்டால் பல நோய்கள் உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்காது. மூல நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஆனால் அதன் முரட்டுத் தோலை உரித்து சாப்பிட அழுத்துகொண்டே உரிக்க ஏதுவாக இருக்கும் என மற்ற பழங்களை நாம் நாடிப் போகிறோம். இதன் பயன் தெரிந்து இன்னும் இதை சாப்பிடாமல் இருக்கலாமா?

மேலும் படிக்க – இயற்கை வழியில் வீட்டில் கை கழுவும் பொருளை தயாரிப்பது எப்படி..!

எவ்வகையான வாழைப் பழங்களை சாப்பிடக்கூடாது?

பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், பச்சை நிறத்திலும் உரிப்பதற்கு ஏதுவாகும்  இருக்கும் ஹைப்ரிட் வாழைப்பழங்களை சாப்பிடுவதை அறவே தவிர்க்க

வேண்டும். இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு எந்தவித உயிர் ஊட்டச்சத்துக்களும் நிச்சயம் கிடைப்பதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன