காய்ந்த நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of dry gooseberry

நெல்லிகாயை சாப்பிடுவதன் மூலமாக 100 ஆண்டுகள் வரை இளமையாக வாழலாம் என சித்தர்கள் எழுதி வைத்துள்ளார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு பயன்படுத்தி வந்த நெல்லிக்காய் இன்றும் பல மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்களைக் காணலாம்.

நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள்

நெல்லிக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன, இதை காய வைத்தாலும் அந்த சத்து குறைவதில்லை. இதில் ஐந்து விதமான சுவைகள் உள்ளன இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு. இவைகள் உங்கள் வாய் மற்றும் குடலுக்கு சிறந்ததாக இருக்கிறது. அதை தவிர்த்து இதில் வைட்டமின் ஏ, பி, சி எனும் மூன்றும் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சாத்துக்குடியில் இருப்பதை விட 20 மடங்கு அதிக அளவிலான வைட்டமின் இதில் இருக்கிறது.

மேலும் படிக்க – ஆவாரம் பொடியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

பல வியாதிகளுக்கு தீர்வு

நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் பல வியாதிகளை தடுக்கலாம். ஜீரணக் கோளாறை சரி செய்யும், பித்த மயக்கங்களை தடுக்கும், மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ரத்த சோகை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இதன் சக்திகள் குறையாமல் இருப்பதினால் இதை நாம் தேனில் பதப்படுத்தி வைத்து சாப்பிடலாம். இதன் மூலமாக, இதில் இருக்கும் சக்தியும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

நெல்லிக்காயை கர்ப்பிணி பெண்கள் முதல் மாதம் முதல் குழந்தைகள் பிறக்கும்வரை இதை காலை மற்றும் மாலை என இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலமாக இவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்றவை தடுக்கப்படும். இதைத் தவிர்த்து அதிகளவில் பசியைத் தூண்டும். இதில் இருக்கும் இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் உடல் உஷ்ணத்தை குறைத்து ரத்தத்தை அதிகரிக்கும். எனவே உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.

புத்திக்கூர்மை

நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அவர்களின் புத்திக்கூர்மை அதிகரித்து, கண் பார்வையும் சீராக இருக்கும். குழந்தைகளின் பற்களை சீராக வளர உதவும். இது பெரியவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும்.

மேலும் படிக்க – குழந்தைகள் விளையாடுவதற்காக ரிமோட்டை கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்??? உஷார்!

எனவே ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இந்த சிறிய நெல்லிக்காய் மூன்று வகையாக இருக்கிறது. சிறு நெல்லிக்காய், பெரு நெல்லிக்காய் மற்றும் கருப்பு நெல்லிக்காய். இதில் கருப்பு நெல்லிக்காய் எங்கும் கிடைப்பதில்லை. மற்ற இரண்டு நெல்லிக்காயை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இது நாட்டு மருந்து கடைகளில் அதிகமாக கிடைக்கிறது. எனவே இதை வாங்கி உங்களை மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன