முருங்கைக்காயின் முக்கியத்துவம்..!

  • by
health benefits of drumstick

உலக நாடுகள் முழுவதும் அவ்வப்போது இந்திய கலாச்சாரத்தை போற்றியும், நம்முடைய உணவு முறைகளை பாராட்டுகிறார்கள். இதற்கு காரணம் தென்னிந்தியாவில் அதிகளவிலான மக்கள் உணவே மருந்து என்ற வழிமுறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். இதன் மூலமாக உலகில் பல நாடுகளில் கிடைக்காத ஏராளமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் இந்தியாவில் மட்டும் கிடைக்கிறது. அதில் மிகவும் சிறப்புமிக்க ஒரு காய் வகை தான் முருங்கைக்காய், இது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமாக கிடைக்கிறது.

முருங்கை மரம்

முருங்கை மரம் என்பது மிகக் குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய ஒரு மரம். இதில் இருந்து வரக்கூடிய முருங்கைப் பூ, முருங்கைக்கீரை, முருங்கைகாய் என அனைத்தும் மனித ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் இருக்கிறது. தென்னிந்தியாவில் முருங்கைக்காயைக் கொண்டு ஊறுகாய், பொரியல், குழம்பு என எல்லாவற்றையும் செய்து சமைத்து சாப்பிடுகிறார்கள். இது படிப்படியாக உயர்ந்து மேலை நாடுகளுக்கும் இதை வணிகம் செய்துவருகிறார்கள். இதன்மூலமாக முருங்கைக்காயின் பெருமையை பற்றி உலக மக்கள் அறிந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – காவல்துறையினர்க்காக பிரத்தியேகமான மாஸ்க் மற்றும் உபகரணங்கள்..!

சக்கரை வியாதி

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் முருங்கைக்காயை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இதைத் தவிர்த்து ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். முருங்கைக்காயில் வைட்டமின் பி மற்றும் பி 12 அதிகமாக இருப்பதினால் உங்கள் உணவுகளை மிக எளிதில் ஜீரணமாக உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்கும்

முருங்கைக்காயில் அதிக அளவிலான இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதினால் உங்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு முருங்கைக்காயை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இதைத் தவிர்த்து முதுமை காலங்களில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற எல்லா பிரச்சினையும் தடுக்கும் சக்தி இந்த முருங்கைக்காயிக்கு உள்ளது.

ரத்தத்தை சுத்திகரிக்கும்

உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை குறைக்க முருங்கைக்காய் உதவுகிறது. அதை தவிர்த்து அதை சுத்திகரித்து அதன் சூழ்ச்சிகளையும் சீராக வைத்துக்கொள்கிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால் உங்களுக்கு ஏற்படும் அலர்ஜிகள் தடுக்கிறது, அதை தவிர்த்து சுவாசத்தையும் சீராக்குகிறது.

மேலும் படிக்க – அதிமதுரத்தை சித்த மருத்துவத்தில் ஏன் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்..!

நோய் எதிர்ப்பு சக்தி

முருங்கைக்காயில் இருக்கும் வைட்டமின் சி உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதன் மூலமாக மிக எளிதில் உருவாகும் இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற அனைத்தையும் தடுக்கப்படுகிறது. இதனால் எந்த ஒரு கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுகளும் உங்களை தாக்காமல் பார்த்துக் கொள்லாம். குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் சக்தி முருங்கைக்காய் கொண்டுள்ளது. இயற்கையாகவே இது வெப்பத்தை அளிக்கக்கூடியது என்பதினால் குளிர்கால பிரச்சனையை தடுக்கிறது.

இது அனைத்திற்க்கும் மேலாக உடல் உறவினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து உங்களை நீண்ட நேரம் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் பண்பு முருங்கைக்காயிக்கு உண்டு. எனவே இதன் அருமையை உணர்ந்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன