முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of drumstick leaves

முருங்கைக்கீரை மிக எளிதில் எல்லா இடங்களிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய கீரையாகும். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது, ஆனால் இதன் மகத்தான பயன்களை அறியாமல் நாம் இதை பல இடங்களில் வீனாக்கி வருகிறோம். எனவே இந்த பதிவின் மூலமாக முருங்கைக்கீரையில் என்னென்ன ஆரோக்கிய குணங்கள் அடங்கி உள்ளது என்பதை காணலாம்.

ரத்த சோகையை எதிர்க்கும் முருங்கைக்கீரை

ஒருவரின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வயிற்று, குடல், சுவாசப் பாதை, செரிமானம் மண்டலம் போன்ற இடங்களில் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாகிறது.

ரத்த சோகை உள்ள பெண்கள் இந்நிலையில் கருத்தரித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கிய குறைபாடுடன் பிறக்கிறது. இதை சரி செய்வதற்காக இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி தேவைப்படுகிறது. இது அனைத்தும் முருங்கைக்கீரையில் இருக்கின்றது.

மேலும் படிக்க – கைகள் சிவக்கும் மருதாணியால்…….!

கண் பார்வைக்கு உதவும் முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ சக்தி இருப்பதினால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் கண் பார்வை பிரச்சினைகளிலிருந்து தீர்வு காண முடியும். முருங்கைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் நமக்கு எளிதில் ஜலதோஷம், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

இருதயம் மற்றும் புற்றுநோய் ஆரோக்கியத்திற்கு உதவும்

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முருங்கை கீரை மிக அவசியம். இதை பொதுவாக ஆண்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வரவிருக்கும் இருதய நோய் பாதிப்பிலிருந்து இது தடுக்கும்.

அதேபோல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்பத்திலேயே முருங்கைக்கீரை அழித்து உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். இதற்கு நீங்கள் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

பெண்கள் ஆரோக்கியத்திற்கு முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்கும். கர்ப்பகாலம் முடிந்த பிறகு பெண்கள் ரத்தக் குறைபாடினால் அவஸ்தைப்படுவார்கள் இதனால் முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்றால் முருங்கைக் கீரை சாப்பிடுவது அவசியம். எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் முருங்கைக்கீரையில் இருப்பதினால் இது உங்களை வலுவடைய செய்கிறது.

ஆண்களுக்கும் சிறந்தது

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் ஆண்மை சக்தியை அதிகரிக்க முடியும். இது ஆண்களின் விந்தணுக்களை கெட்டியாகி அதிகரிக்க உதவுகிறது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.

மேலும் படிக்க – மனக்கும் மல்லிகையில் மகத்தான மருத்துவகுணம்

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக நாம் முருங்கைக் கீரையை வெயிலில் நன்கு காயவைத்து அதை பொடியாக்கி, பாலில் கலந்து குடித்தால் குழந்தைகள் கண்கள் மற்றும் தலை முழுக்க குளிர்ச்சியை உண்டாக்கி அவர்களின், செயல் திறனை அதிகரிக்கும்.

இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கைக் கீரையை தினமும் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. எனவே இதை அறிந்து இனிமேலாவது இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த கீரையை வாங்கி பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன