செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of drinking water in copper vessels

பழங்கால மக்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு முழு காரணம் அவர்கள் பயன்படுத்திய உணவுகள் மற்றும் உணவை பதப்படுத்திய முறைகளும் தான். இப்படி நம்முடைய முன்னோர்கள் அக்காலத்தில் பானை வடிவில் உள்ள செம்பு பாத்திரத்தில் தாங்கள் குடி நீரை சேமித்து அருந்தி வந்தார்கள். இதனால் அவர்களின் உடலில் கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவைகள் சமநிலையில் வைக்க தாமிரம் உதவியது. நாம் குடிக்கும் தண்ணீர் மக்கி போகாமல் இருப்பதற்காகவும் அதில் உள்ள எலக்ட்ரோலைட் சேமிப்பதற்கும் அக்கால மக்கள் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தினார்கள். இதை நாம் கடைப்பிடிப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

பாக்டீரியாக்களை எதிர்க்கும்

செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் சேமித்து வைப்பதினால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் கொள்ளப்படுகிறது. இதனால் நமக்கு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது, அதை தவிர்த்து நமது வயிற்றுக்குள் இருக்கும் புண்களை குணமாக்குகிறது. அதேபோல் நமது செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – பர்ஃப்யூம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மூளை பாதுகாப்பு

மூளை நரம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க மற்றும் அதை வலுப்படுத்த தாமிரம் கலந்த குடிநீர் பெரிதாக உதவுகிறது. இதனால் உங்கள் மூளை ஆரோக்கியம் அடைந்து ஆற்றலுடன் செயல்படுகிறது.

தைராய்டு பிரச்சனை

தாமிரம் ஓர் அரிய வகை கனிமமாகும்அதிகரித்த, எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தைராய்டு சுரப்பியை சமநிலையில் வைத்து நமது உடல் நிலையை வலுப்படுத்துகிறது. யாருக்கு தாமிர சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு முதலில் தைராய்டு பிரச்சினைகள் ஏற்படும்.

மூட்டு பிரச்சனையை சரிசெய்யும்

கீல்வாதம் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி என அனைத்தையும் குணப்படுத்தும். அதேபோல் வெளிப்புறத்தில் ஏற்பட்ட காயங்களையும் விரைவில் குணப்படுத்த உதவுகிறது. நம் உடலில் ஏற்படும் தீய பாக்டீரியாக்களை அனைத்தையும் அழித்து நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

ஆன்ட்டி ஆக்சைடு

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பத்தில்  அழித்து நம்மை புற்றுநோய் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

சிவப்பணுக்களை அதிகரிக்கும்

நம் உடலில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நமக்கு ரத்தசோகை பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தாமிரா நீரைக் குடிப்பதன் மூலமாக அவர்களுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

மேலும் படிக்க – கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

என்றும் இளமை

நீங்கள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் தினமும் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த நீரை பருகுங்கள். இது உங்கள் முகங்களில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இளமையாக வைத்துக் கொள்கிறது. இதனால் உங்கள் தோற்றம் என்றும் இளமையாக இருக்கும்.

நாம் சாதாரணமாக குடிக்கும் குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து குடிப்பதன் மூலமாக இவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது. இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை, எனவே எளிமையான இந்த செயலை செய்து உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன