இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of drinking tender coconut

கோடை காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுவது இளநீர். இளநீரில் வைட்டமின்கள், கனிமங்கள், அமினோ அமிலங்கள், மின்பொருட்கள், என்சைம்கள் என ஏகப்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கும் இந்த குளிர்பானத்தை நாம் அருந்துவதனால் நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

வயிற்றுப்போக்கு பிரச்சனையை குணப்படுத்தும்

இளநீரில் வைட்டமின்-சி, அமினோ அமிலங்கள், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதினால் நமது வயிற்றுப்போக்கு பிரச்சனை அனைத்தையும் குணப்படுத்துகிறது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்புகள் இருப்பதினால் இதை தினமும் அருந்துவதன் மூலம் நமது எடையையும் குறைக்க முடியும். இதில் இருக்கும் குறைந்த கொழுப்புகளும் நல்ல கொழுப்புகளாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

நீரழிவு நோயை தடுக்கும்

சக்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை அருந்துவதன் மூலம் குறைக்க முடியும். அதேபோல் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் போன்ற அனைத்தையும் இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தடுத்துவிடும். எனவே இதை முடிந்தவரை குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.

உடல் வறட்ச்சி மற்றும் ரத்த அழுத்தம்

உடல் வறச்சி போன்ற நிலைமைகள் நகரத்தில் ஏற்பட்டால் உடனே நாம் அதற்கேற்ப கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதுவே ஏதாவது காடு, மலைப் பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இளநீரை அருந்துவதன் மூலமாக நமது வறட்சியைப் போக்கலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வாரத்திற்கு ஒரு இளநீரை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சிறுநீரகக் கற்கள்

பொதுவாக நம் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தினமும் நாம் அதிகப்படியான நீர் குடிப்பதன் மூலம் அதை அகற்றி விடலாம் என்பார்கள். அதேபோல்தான் நீரை விட பலமடங்கு சக்தியைக் கொண்ட இளநீரை அருந்துவதன் மூலமாக நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றி விடும்.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

சரும அழகு 

நம் சருமத்தில் இருக்கும் புள்ளிகள், கருவளையங்கள், பருக்கள் போன்ற எல்லாவற்றையும் இளநீரை அருந்துவதன் மூலமாக மறையச் செய்யலாம். இல்லையெனில் இளநீரை இரவில் உறங்குவதற்கு முன்பாக முகத்தில் தடவி விட்டு காலையில் கழுவலாம் இதைத் தொடர்ந்து 3 வாரங்கள் செய்வதன் மூலம் உங்கள் முக மாற்றத்தை உங்களால் உணர முடியும். இதில் இருக்கும் சக்திகளினால் நமது சருமமும் பொலிவாகும் மின்னும்.

புற்றுநோய்

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை இளநீருக்கு உள்ளது. எனவே இதை அருந்துவதன் மூலமாக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்பத்தில் அழித்துவிடுகிறது. அதை தவிர்த்து உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் இளமையில் முதிர்ச்சி தோற்றங்களை தடுத்து எப்போதும் இளமையாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தினமும் தெருவோரங்களில் மலிவு விலையில் விற்கப்படும் இளநீரில் இத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே கோடை காலம் என எக்காலத்திலும் உங்களுக்கு தாகம் எடுத்தால் குளிர்பானங்களை அருந்தாமல் இளநீரை வாங்கி அருந்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன