சர்பத் குடிப்பதினால் நமக்கே கிடைக்கும் நன்மைகள்..!

  • by
health benefits of drinking sarbath

நாம் தெருவோரங்களில் பல விதமான நிறங்களில் சர்பத் கடை பார்த்திருப்போம். ஏன் அதை வாழ்க்கையில் ஒரு முறையாவது வாங்கிக்குடித்து இருப்போம். வெயில் காலங்களில் தாகத்திற்காக மட்டுமே அருந்தும் இந்த சர்ப்பத்தின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அது எப்படி மற்றும் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

நன்னாரி சர்பத்

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருள் தான் நன்னாரி சர்பத். இதை கலந்து நாம் அருந்துவதினால் நமது உடல் சூட்டை குறைத்து, நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. இதை நன்னாரி சாறிலிருந்து எடுப்பதினால் இதை நன்னாரி சர்பத் என்று அழைக்கிறார்கள்.

மேலும் படிக்க – சுத்தம் சுகாதரம் பேணி வருதல் சிறப்பு

நீர் ஓட்டத்தை அதிகரிக்கும்

நம் உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றும் வழிகள்தான் வியர்வை, சிறுநீரகம். எனவே இந்த இரண்டு வழிகளில் வெளிவரும் நீர் ஓட்டத்தை அதிகரிக்க சர்பத் உதவுகிறது. சர்பத் குடிப்பதினால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.

உஷ்ணத்தைத் தணித்து நோய்களை குறைக்கிறது

சர்பத் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள உஷ்ணம் குறையும். உங்களுக்கு மிக எளிதில் உறக்கத்தை அளிக்கிறது, இதைத் தவிர்த்து ஒற்றைதலைவலி, செரிமான பிரச்சனை, வாதநோய், பித்தம் நிக்கும் போன்று பல இன்னல்களை தவிர்க்கிறது.

கிருமிகள் தொற்று

கிருமிகள் தொற்றுகளால் ஏற்படும் வறட்டு இரும்பல், நீர் சுருக்கு, நீர் கடுப்பு, மூலச்சூடு போன்றவைகளை வரவிடாமல் தடுக்கிறது. இதைத் தவிர்த்து உங்கள் கூந்தலில் ஏற்படும் நரை முடியை கருமையாக்கி உங்களை இளமையாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – கோவிட் – 19 பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.!

தோல் நோய்களை தடுக்கும்

இதை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் தோல் பிரச்சனைகளை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் உடலில் இருந்து வரும் வியர்வை நாற்றத்தை குறைக்கிறது. எல்லேரின் தாகம் மற்றும் பசியை போக்கும் இந்த சர்பத் எல்லா இடங்களிலும் மிக எளிதில் கிடைக்கின்றன.

இதை தயாரிக்கும் பொருட்களை கடைகளில் வாங்கி நம் வீட்டிலேயே இதுபோன்று ருசியான சர்பத்தை தயாரிக்கலாம். இல்லையெனில் ஒவ்வொரு தெருக்களிலும் நமக்கு பிடித்தமான பலவிதமான சர்பத்களை விற்கிறார்கள், அதை வாங்கி அருந்தி பயன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன