அருகம்புல் சாறின் பயன்கள்..!

  • by
health benefits of drinking grass juice

நம் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் அதிகளவில் நமக்கு அறிவுறுத்த கூடிய ஒருசில உணவுகளில் நிச்சயம் இந்த அருகம்புல் சாறு இருக்கும். அவர்கள் காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு இந்த அருகம்புல் சாறும் ஒரு காரணம். இது எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இயற்கை வழியில் உருவாகும், இந்த அருகம்புல் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. எனவே இதை தினமும் கசாயமகா அருந்தி இன்றும் ஏராளமான முதியவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருகம்புல் சாறிக் இருக்கும் நன்மைகளை மற்றும் அதை எப்படி தயார் செய்வது என்பதை காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

அருகம்புல்லில் சுமார் 65 சதவீதம் பச்சையும் உள்ளது, எனவே இது உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். அதே போல் உங்கள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத் தன்மையைக் குறைத்து காரத்தை அதிகரிக்கிறது. இது அனைத்தும் சீராக இருக்கும் நிலையில் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, எனவே எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அருகம்புல்லை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – பசலைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பித்தத்தை கட்டுப்படுத்தும்

கோடை காலங்களில் ஏற்படும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை அருகம்புல்லுக்கு உண்டு. உங்கள் உடலில் ஏற்படும் பித்தங்களை குறைத்து, தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. அயராத உழைப்பின் மூலமாக மற்றும் ஓய்வில்லாமல் செயல்படுத்தினால் உங்கள் உடலில் பித்தம் அதிகரிக்கும். இதனால் உடலின் வெப்பநிலையும் அதிகமாவதை தடுக்கும் தன்மை அருகம்புல் சாறுக்கு உண்டு.

சிறுநீரக பாதுகாப்பு

அருகம்புல் சிறுநீர்ப்பாதையில் உண்டாகும் அழிச்சியை தடுக்கிறது. அதைப்போல் உங்கள் ரத்த குழாய் தடிமனுமாகாமலும் மற்றும் சுருங்கி போகாமலும் பார்த்துக் கொள்கிறது. உங்களுக்கு ஏற்படும் உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை சம நிலையில் வைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதைத் தவிர்த்து உடலில் உள்ள ஏராளமான பிரச்சினைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தன்மை இந்த அருகம்புல் சாறுக்கு உண்டு.

மேலும் படிக்க – ஆரோக்கியத்திற்கு சிறந்தது பச்சை மிளகாயா அல்லது சிகப்பு மிளகாயா..!

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறை வீட்டில் எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதைக் காணலாம். முதலில் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை பறித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்கு நீரில் அலச வேண்டும். அருகம்புல்லுடன் சிறிது மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப் பூண்டை சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு அறிந்த பிறகு அதை வடிகட்டி அதன் சாறை மட்டும் எடுத்து அதிகாலையில் குடிக்க வேண்டும். இது குடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.

எனவே இதை தினமும் போதுமான அளவு குடிப்பதன் மூலமாக உங்கள் செரிமானத்தை சீராக்கி போதுமான ஆற்றலைத் தருகிறது. இதை மிக சுத்தமான முறையில் தயாரிக்க வேண்டும், இதை தவிர்த்து வயதிற்கு ஏற்றவாறு குறைந்த அளவில் குடிக்க வேண்டும். இவை அனைத்தையும் சரியாக பின்தொடர்ந்தால் உங்கள் ஆரோக்கியத்தை நினைத்து எந்த ஒரு கவலையும் கொள்ள வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன